ஜாவா பைக்.. 80ஸ் ஹீரோ போல மாறிய விஜய்சேதுபதி.. பிளேபாய் போட்டோகிராஃபர் பண்ண வேலையை பாருங்க!

சென்னை: பிளேபாய் உள்ளிட்ட சர்வதேச மேகஸின்களுக்கு புகைப்படக் கலைஞராக பணியாற்றி வரும் எல். ராமசந்திரன் கேமரா வண்ணத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடத்தியுள்ள புதிய போட்டோஷூட் மேன் ஆஃப் ஃப்யூஷன் எனும் பெயரில் வீடியோவாக வெளியாகி உள்ளது.

ஏற்கனாவே லாக்டவுன் நேரத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக எல். ராமசந்திரன் உடன் இணைந்து விஜய்சேதுபதி நடத்திய போட்டோஷூட் வேற லெவலில் வைரலானது.

இந்நிலையில், பழங்காலத்து நடிகர் போல விஜய்சேதுபதி ஜாவா பைக் உள்ளிட்ட ப்ராப்பர்ட்டீஸ்களை கொண்டு இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளார்.

பிளே பாய் போட்டோகிராஃபர்

பிளே பாய் போட்டோகிராஃபர்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் ஊரில் பிறந்த எல். ராமசந்திரன். அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் இதழகளான பிளே பாய், மேக்ஸிம் என ஏகப்பட்ட மேகஸின்களுக்கு புகைப்படக் கலைஞராக பணியாற்றி புகழ்பெற்றவர். நிர்வாண புகைப்படங்களை கலை அழகுடன் வித்தியாசமாக எடுப்பதில் வல்லவர்.

பிக் பாஸ் பிரபலங்கள்

பிக் பாஸ் பிரபலங்கள்

பிக் பாஸ் பிரபலங்களான யாஷிகா ஆனந்த், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட நடிகைகள் எல். ராமசந்திரன் உடன் இணைந்து ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை குவித்துள்ளனர். வித்தியாசமான கான்செப்ட் ஆர்ட் புகைப்படங்களை கலை படைப்பாக எடுத்து அசத்தி வருகிறார் ராமசந்திரன்.

லாக்டவுன் அழுத்தம்

லாக்டவுன் அழுத்தம்

லாக்டவுனில் இருந்த மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் விஜய்சேதுபதி எல். ராமசந்திரன் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கின. நீண்ட தாடியுடன் கையில் 'அ', 'ஒ' உள்ளிட்ட உயிர் எழுத்துக்களை வைத்துக் கொண்டு வெரைட்டி வெரைட்டியாக போட்டோக்களை போட்டு அசத்தினார்.

பாம்புடன் நிர்வாணமாக

பாம்புடன் நிர்வாணமாக

சமீபத்தில், பெண் மாடல் ஒருவரை நிர்வாணமாக வைத்து உடல் முழுக்க பாடி பெயின்ட் செய்து தலையில் பூக்களை நட்டு தனக்கே உரிய பாணியில் ஒரு கலை படைப்பாகவே அவரை மாற்றி எடுத்த போட்டோஷூட் புகைப்படம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. காரணம் அதில் அந்த பெண்ணின் தலையில் ஒரு நிஜ பாம்பு ஒன்று ஓடியது தான்.

மீண்டும் விஜய்சேதுபதி உடன்

இந்நிலையில், தற்போது மீண்டும் நடிகர் விஜய்சேதுபதி உடன் இணைந்து பிரபல புகைப்படக் கலைஞர் ராமசந்திரன் எடுத்துள்ள மேன் ஆஃப் ஃபியூஷன் போட்டோஷூட் புகைப்படங்கள் மேக்கிங் வீடியோவுடன் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜாவா பைக்கில் பழைய 80ஸ் ஹீரோ போல விஜய்சேதுபதி மாறி அசத்தி இருக்கிறார்.

Recommended Video

கணவரை வெளுத்து வாங்கிய Genelia | 'என் முன்னாடி நடிகைக்கு முத்தமா'
ரோஷ்னா அன் ராய்

ரோஷ்னா அன் ராய்

பிரபல மலையாள நடிகையும் மேக்கப் கலைஞருமான ரோஷ்னா அன் ராய் தான் விஜய்சேதுபதிக்கு இப்படியொரு கிளாசிக்கல் மேக்கப்பை போட்டு வேற லெவல் லுக்கிற்கு மாற்றி உள்ளார். பழைய பாடல் இசை பின்னணியில் ஒலிக்க விஜய்சேதுபதியை புதிய தோற்றத்தில் மாற்றி இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளனர். வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடனும் மிரட்டுகிறார் மக்கள் செல்வன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X