Don't Miss!
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வில்லன் இல்லை.. சூப்பர்ஸ்டாருக்கு தம்பியா நடிக்கப் போறாராம் விஜய் சேதுபதி!
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த், 'காலா' படத்தை அடுத்து இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால், தற்போதைய தகவல்படி விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாக நடிக்க இருக்கிறாராம்.
கார்த்திக் சுப்புராஜ் படம்
ரஜினி ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய இருக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. அதோடு படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தம்பியாக விஜய் சேதுபதி
சூப்பர்ஸ்டாரின் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போதைய தகவல்படி விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாக நடிக்க இருக்கிறாராம்.
படக்குழு
இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக ரஜினியுடன் இணையவுள்ளார். மேலும் இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் யார் என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
கார்த்திக் சுப்புராஜ் படத்தில்
ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா', 'இறைவி' படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். எனவே, ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நிச்சயம் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. ரஜினியுடன் விஜய்சேதுபதி இணையும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.