For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எங்க போனாலும் நீங்க தானா?... இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி மீம்ஸ்

  |

  சென்னை : தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி என்பது அனைவரும் அறிந்ததே. தியேட்டர், டிவி, ஓடிடி தளம் என அனைத்திலும் அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் படங்கள் ரிலீசாகி வருகின்றன. இது எப்படிங்க முடியுது...எங்க திரும்பினாலும் நீங்களே இருக்கீங்களே என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

  செப்டம்பர் முதல் வாரத்தில் மட்டும் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. மறைந்த டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய கடைசி படமான லாபம் செப்டம்பர் 9 ம் தேதி தியேட்டரில் ரிலீசானது. அதைத் தொடர்ந்து அறிமுக இயக்குனரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கிய துக்ளக் தர்பார் படம் செப்டம்பர் 10 ம் தேதி சன் டிவி.,யில் வெளியிடப்பட்டது. இவை இரண்டுமே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டன.

  Vijay Sethupathi memes goes viral in social media

  அதைத் தொடர்ந்து டைரக்டர் தீபக் சுந்தரராஜன் இயக்கிய காமெடி, த்ரில்லர் படமான அனபெல் சேதுபதி செப்டம்பர் 17 ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது. இது மட்டுமல்ல விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷன் சன் டிவி.,யில் ஏற்கனவே வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

  விஜய் சேதுபதியின் இந்த அடுத்தடுத்த அவதாரங்களால் நெட்டிசன்கள் மீம்களை உருவாக்கி, வைரலாக்கி வருகின்றனர். தியேட்டர் பேனர், ஃபிளக்ஸ் பேனர், போஸ்டர், டிவி ஷோக்கள், ஓடிடி தளங்கள் என எங்கு திரும்பினாலும் விஜய் சேதுபதி தான் இருக்கார். சமீப நாட்களாக எதில் பார்த்தாலும் விஜய் சேதுபதி முகம் தான் தெரிகிறது என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

  Laabam Movie Review | Poster Pakiri Review | Filmibeat Tamil

  மற்றொருவர் ஹாட் ஸ்டாரை திறந்தால் அன்பெல், நெட்ஃபிளிக்சை திறந்தால் துக்ளக் தர்பார், சன் டிவி பார்த்தால் மாஸ்டர் செஃப், வாட்ஸ்அப் போனால் சேதுயிசம், யூட்யூப் திறந்தால் விஜய் சேதுபதி பேட்டி, தியேட்டர் போனால் லாபம். இப்படி எங்கு பார்த்தாலும் விஜய் சேதுபதியே இருந்தால் பார்ப்பவர்களுக்கு போர் அடிக்காதா என கேட்டுள்ளார். இந்த மீம்ஸ் மற்றும் கமெண்ட்களுக்கு விஜய் சேதுபதி இதுவரை பதிலளிக்கவில்லை. இவற்றிற்கு பதிலளிக்க விஜய் சேதுபதிக்கு நேரமில்லை என்பது தான் உண்மை.

  Vijay Sethupathi memes goes viral in social media

  கமல் நடிக்கும் விக்ரம், , விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல், கடைசி விவசாயி, வெற்றமாறன் இயக்கும் விடுதலை, சீனு ராமசாமி இயக்கும் மா மனிதன், அமீர் கானுடன் லால் சிங் சத்தா, ஆர்டிகிள் 19(1)(ஏ), ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் மைக்கேல், ஃபேமிலிமேன் வெப் சீரிசை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கும் பெயரிடப்படாத பாலிவுட் வெப் சீரிஸ், தமிழில் வெளியான மாநகரம் படத்தின் பாலிவுட் ரீமேக்கான மும்பைக்காரர் என விஜய் சேதுபதி நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டு போகிறது.

  இவைகள் தவிர மேலும் சில படங்களில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருகிறதாம். விஜய் சேதுபதி நடிக்கும் படங்களின் பட்டியல் தலைசுற்ற வைக்கும் நிலையில், அவரை வைத்து உருவாக்கப்படும் மீம்கள் சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.

  விஜய் தேவரகொண்டா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கியது !விஜய் தேவரகொண்டா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கியது !

  English summary
  Netizens have been creating and viralizing memes with these successive incarnations of Vijay Sethupathi. Vijay Sethupathi will be there wherever he goes for theater banner, flex banner, poster, TV shows, OTT sites. Many have commented that Vijay Sethupathi's face is what you see in recent days.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X