விஜய் சேதுபதியை காண விரும்பிய கேன்சர் பாதித்த சிறுவன்... நிறைவேற்றிய மக்கள் செல்வன்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தன்னை சிறந்த நடிகராக நிலைநிறுத்தியுள்ளார்.
பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
இந்நிலையில் தன்னை காண விரும்பிய கேன்சர் பாதித்த சிறுவனை நேரில் சந்தித்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

பன்முக திறமை
நடிகர் விஜய் சேதுபதி நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர் என பன்முகத் திறமையை காட்டி வருகிறார். தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் அதற்கு முன்னதாகவே சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

தேர்ந்தெடுத்த நடிப்பு
ஆரம்பத்தில் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்த படங்கள் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகியவை. தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கிழவன் வேடத்திலும் பொருந்துகிறார். வில்லனாகவும் மிரட்டுகிறார். சாதுவான ஹீரோவாகவும் மகிழ்விக்கிறார்.

விஜய் சேதுபதியை சந்திக்க விருப்பம்
மேலும் பல்வேறு சமூக நிகழ்வுகளிலும் இவர் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில் கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் விஜய் சேதுபதியை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததை கேள்வியுற்று அந்த சிறுவனை சந்தித்து அவனுடனும் அவனுடைய குடும்பத்தினருடனும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

நெகிழ்ச்சியான நிகழ்வு
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் இத்தகைய செயலில் ஈடுபட்டார். கனடாவில் வசிக்கும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தீவிர ரசிகரின் விருப்பத்தை கேள்விப்பட்டு அவருடன் வீடியோ காலில் பேசினார் கமல். இந்நிலையில் விஜய் சேதுபதியும் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











