Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தோட ஸ்கிரிப்ட்... உளறிக் கொட்டிய இயக்குநர் மிஷ்கின்!

சென்னை: இந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ள மும்பைகர் ஜூன் 2ம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து மேலும் பல படங்களும், வெப் சீரிஸும் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள விஜய் சேதுபதி, மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் பேசியது வைரலாகி வருகிறது.

 Vijay Sethupathi: Mysskin has started writing the story for Vijay Sethupathis film

விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணி

ஹீரோ, வில்லன், கேமியோ ரோல் என கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் வெரைட்டியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கடந்தாண்டு விக்ரம், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து மாஸ் காட்டினார். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு தொடக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ஃபார்ஸி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருந்தது.

இதனிடையே மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின், அடுத்தடுத்து அஞ்சாதே, நந்தலாலா, துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ படங்களை இயக்கியிருந்தார். இயக்குநராக மட்டும் இல்லாமல் தற்போது நடிகராகவும் மாறிவிட்டார் மிஷ்கின்.

 Vijay Sethupathi: Mysskin has started writing the story for Vijay Sethupathis film

சிவகார்த்திகேயனின் மாவீரன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ஒரு படமும், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார் மிஷ்கின். இதில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்கிவிட்டதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

பிசாசு 2 படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதியுடன் மிஷ்கினுக்கு நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போதே விஜய் சேதுபதியிடம் கதையை கூறி சம்மதம் வாங்கிவிட்டாராம். மேலும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், கடந்த பிப்ரவரி மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது.

 Vijay Sethupathi: Mysskin has started writing the story for Vijay Sethupathis film

ஆனால், விஜய் சேதுபதி - மிஷ்கின் படத்தின் வேலைகள் இன்னும் தொடங்காமல் இருப்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை இப்போதுதான் தொடங்கியுள்ளாராம் மிஷ்கின். மொத்தமாகவே அரை மணி நேரம் அளவிற்கு தான் இந்தப் படத்திற்கான திரைக்கதையை முடித்துள்ளாராம். அதனால், விஜய் சேதுபதி - மிஷ்கின் படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் தாமதமாகும் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X