Petta trailer: பேட்ட டிரைலரில் விஜய் சேதுபதிக்கு கடைசி இடம்... அப்போ மெயின் வில்லன் அவர் இல்லையோ!
ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டிரைலரில் விஜய் சேதுபதியின் பெயர் கடைசியாக போடப்பட்டுள்ளது.
பேட்ட திரைப்படத்தின் டிரைலர் உலகளவில் டிரெண்டிங்காகி வருகிறது. இந்தியாவில் பேட்ட டிரைலர் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.
இந்த டிரைலர் குறித்து பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதில் திரைத்துறையினரும் அடக்கம்.
மனதில் எழும் கேள்வி
இந்நிலையில் இந்த டிரைலரை பார்க்கும் போது பலருக்கு மனதில் எழும் கேள்வி விஜய் சேதுபதியை பற்றியது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக ரஜினி, இருந்தாலும் தற்போதைய சூழலில் மக்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி.

ரஜினிக்கு வில்லன்
பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என சொன்னதில் இருந்தே, அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் சொன்னபடி விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம், டிரைலரை பார்க்கும் போது வருகிறது.

முழுக்க முழுக்க ரஜினியிசம்
ஏனென்றால், இந்த டிரைலர் முழுக்க முழுக்க ரஜினியிசமாகவே இருக்கிறது. அது அப்படி தான் இருக்க வேண்டும் என்பது ஊரறிந்த விஷயம் என்றாலும், விஜய் சேதுபதிக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

நடிகர்களின் பெயர்கள்
டிரைலரில் நடிகர்களின் பெயர்களில் முதலில் ரஜினியின் பெயர் வருகிறது. அதைத்தொடர்ந்து, சிம்ரன், திரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நாவாசுதீன் சித்திக்கி ஆகியோரின் பெயர்கள் வருகின்றன. அதற்கு பிறகு தான் கடைசியாக விஜய் சேதுபதியின் பெயர் வருகிறது. ஒருவேளை முக்கியமான கதாபாத்திரத்தின் பெயரை கடைசியில் போடுவது தான் நியாயம் என இயக்குனர் நினைத்திருக்கலாம்.

மொத்தம் மூன்று இடங்கள்
அப்படியே இருந்தாலும், டிரைலரில் மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே விஜய் சேதுபதி வருகிறார். மேலும், நாவாசுதீன் சித்திக்கி பேசும் ஒரு வசனத்தை வைத்து பார்க்கும் போது, அவரிடம் அடியாளாக இருக்கும் ஜித்து தான் விஜய் சேதுபதி எனத் தெரிகிறது.

விஜய் சேதுபதியின் ரசிகர்கள்
இந்த விஷயங்கள் எல்லாம் விஜய் சேதுபதியின் ரசிகர்களை ஏமாற்றமடையவே செய்யும். பீட்சாவுக்கு பிறகு, ஜிகர்தண்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. இதையடுத்து இறைவி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவார். எனவே பேட்ட படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது டிரைலரை வெளியான பிறகும் கூட சன்பென்சாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications











