நயன்தாரா, சமந்தா காலில் விழுந்து கும்பிடும் விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர் ரிலீஸ்!
சென்னை: இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் கூட இப்படி ஒரே நேரத்தில் புரபோஸ் செய்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் வேற லெவலில் வித்தியாசமாக ஃபன் ரோலர் கோஸ்டராக அமைத்து இப்படியொரு படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு, ரெட்டின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கலகலப்பான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
டீசரின் கடைசியில் நயன்தாரா மற்றும் சமந்தா காலில் விஜய்சேதுபதி விழுந்து கும்பிடும் காட்சி யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக உள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் டீம் மீண்டும் இணைந்து உருவாக்கி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடிகை சமந்தாவும் தனது பங்குக்கு காட்சிக்கு காட்சி சிக்சர் அடித்துள்ளார்.

சமந்தா பெயர் முதலில்
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசரில் நயன்தாராவின் பெயருக்கு முன்னதாக நடிகை சமந்தாவின் பெயரை டீசரில் போட்டுள்ளனர். அந்த அளவுக்கு சமந்தாவுக்கான முக்கியத்துவத்தை இந்த படத்தில் நடிகை நயன்தாரா கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் இருவர்
ஒரே நேரத்தில் இருவரிடம் காதலை சொல்லும் காட்சியிலேயே விஜய்சேதுபதி இஸ் பேக் என்பதை நிரூபித்து விட்டார். கடந்த ஆண்டு அவர் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் சொதப்பிய நிலையில், இந்த ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் அனைத்தையும் சரிசெய்வார் என்பது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு ஃபிரேமிலும் விஜய்சேதுபதி நடிப்பில் அசத்துகிறார்.

கண்மணி கங்குலி
காத்துவாக்குல ரெண்டு காதல் பட டீசரின் ஒவ்வொரு காட்சியிலும் செம ஸ்லிம்மாக காட்சியளிக்கும் நயன்தாரா இந்த படத்தில் கண்மணி கங்குலி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செளரவ் கங்குலியின் ரிலேஷனா என விஜய்சேதுபதி கொடுக்கும் கவுன்ட்டர் ரசிகர்களை பார்த்த உடனே சிரிக்க வைத்து விடுகிறது.

ரெட்டின் கிங்ஸ்லி
நானும் ரவுடி தான் படத்தில் காமெடி நடிகராக கலக்கிய ஆர்.ஜே. பாலாஜி ஹீரோ மற்றும் இயக்குநராக அப்கிரேட் ஆன நிலையில், இந்த படத்தில் ரெட்டின் கிங்ஸ்லியை வைத்து காமெடியில் விளையாடி இருக்கிறார் விக்னேஷ் சிவன் என்பது தெரிகிறது. காதலில் விழுந்திட்டியா என விஜய்சேதுபதியிடம் அவர் கேட்கும் இடம் அல்டிமேட்.

கண்மணியா? கத்திஜாவா?
நடிகர் பிரபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கண்மணியா? கத்திஜாவா? யாரை காதலிக்கிறாய் என அவர் கேட்கும் காட்சிகள் டீசரில் மிரட்டுகிறது. எப்படி இருக்கப் போகிறது படத்தின் ஸ்க்ரீன் பிளே என்றும் நயன் மற்றும் சமந்தா இருவரும் எப்படி அசத்த போறாங்க என்பதையும் யோசிக்கும் போதே ரசிகர்களுக்கு தலை சுற்றுகிறது.
காலில் விழுந்த விஜய்சேதுபதி
கோயிலில் வைத்து நயன்தாரா மற்றும் சமந்தா இருவரின் காலில் விழும் விஜய்சேதுபதி, அப்பனே முருகா.. பெருமாளே காப்பாத்துப்பா என சொல்லும் வசனம் ரசிகர்களை அடக்க முடியாமல் சிரிக்க வைத்து விடுகிறது. வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











