விஜய் சேதுபதியின் கடத்தல் ஆசையை நிறைவேற்றி வைத்த தனுஷ்
சென்னை: விஜய் சேதுபதி கடத்த நினைத்த நயன்தாராவே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
வாலிபர் முதல் வயதானவர் வரை எந்த கெட்டப்பானாலும் முகம் சுளிக்காமல் ஏற்று நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவர் பல படங்களில் நடித்துள்ள போதிலும் வளர்ந்து வரும் நடிகைகள் தான் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்நிலையில் தான் விஜய் சேதுபதிக்கு தனுஷ் அந்த இன்ப அதிர்ச்சியை அளித்தார்.

நானும் ரவுடி தான்
வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து நடித்த தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் அடுத்த படம் நானும் ரவுடி தான்.

விஜய் சேதுபதி
நானும் ரவுடி தான் படத்திற்கு விஜய் சேதுபதியை ஹீரோவாக தேர்வு செய்த தனுஷ் அவரிடம் நயன்தாராவுடன் நடிக்கிறீர்களா என்று கேட்டார். முன்னணி ஹீரோயினுடன் நடிக்க கசக்கவா செய்யும் அவரும் உடனே ஓ.கே. சொல்லிவிட்டார்.

நயன்தாரா
விஜய் டிவி விருது விழாவில் நீ்ங்கள் யாரையாவது கடத்த நினைத்தால் யாரை கடத்துவீ்ர்கள் என்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல் நயன்தாரா என்றார் விஜய் சேதுபதி.

ப்ப்பா
தன்னை கடத்த வேண்டும் என்று விஜய் சேதுபதி கூறியதை கேட்ட நயன்தாரா சிரிக்க அவரை பார்த்து விஜய் சேதுபதி ப்ப்பா எவ்வளவு அழகு என்று கூற நயனுக்கோ வெட்கமாகி போய்விட்டது.

தனுஷ்
நயன்தாராவை இப்படி புகழ்ந்த விஜய் சேதுபதிக்கு அதே நயனை ஜோடியாக்கியுள்ளார் தனுஷ். இதற்காக விஜய் சேதுபதி தனுஷை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டிருப்பார்.

அனிருத்
தனுஷ் தயாரிக்கும் படங்களை போன்றே இந்த படத்திற்கும் கொலவெறி புகழ் அனிருத் தான் இசையமைக்கிறார்.

எதிர்நீச்சல்
தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாராவுடன் வந்து குத்தாட்டம் போட்டார். நானும் ரவுடி தான் படத்திலும் வந்து தலையை காட்டுவாரா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











