»   »  விக்னேஷ் சிவன்- விஜய் சேதுபதியின் 'காத்துவாக்குல இரண்டு காதல்'

விக்னேஷ் சிவன்- விஜய் சேதுபதியின் 'காத்துவாக்குல இரண்டு காதல்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்திற்கு, காத்துவாக்குல இரண்டு காதல் என்று பெயர் வைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போடா போடி படத்திற்குப் பின் 3 வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான, நானும் ரவுடிதான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ்

விக்னேஷ்

இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என்று பன்முகங்களைக் கொண்டவர் விக்னேஷ் சிவன். 2012 ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான போடா போடி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறத் தவறியது.

நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

3 வருடங்கள் கழித்து விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் சூப்பர் ஹிட்டடித்தது.இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் விக்னேஷ் சிவனின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சேதுபதி

சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான சேதுபதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வசூலைக் குவித்து வருகிறது. இதனால் நானும் ரவுடிதான், சேதுபதி என்று அடுத்தடுத்த வெற்றிகளால் மீண்டும் பார்முக்கு வந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

காத்துவாக்குல இரண்டு காதல்

காத்துவாக்குல இரண்டு காதல்

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கப்போகும் படத்திற்கு காத்துவாக்குல இரண்டு காதல் என்று பெயர் வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

த்ரிஷா, நயன்தாரா

த்ரிஷா, நயன்தாரா

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா, நயன்தாரா நடிக்கப் போவதாக கூறுகின்றனர். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Vijay Sethupathi Again Team Up with Vignesh Shivan for his Next Movie. The Official Announcement Can be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil