Thalaivan Thalaivi Box Office: ஊரு மெச்சும் தலைவன் தலைவி.. முதல் நாளில் கல்லா கட்டியது எவ்வளவு?
சென்னை: விஜய் சேதுபதி, நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தலைவன் தலைவி. இந்த படத்தின் பாடல்கள் வெளியானபோதே படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. படம் நேற்று அதாவது ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் யோகி பாபு, சென்ட்ராயன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், சரவணன், தீபா சங்கர், சேம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் மிகச் சாதாரணமாக அன்றாட குடும்ப வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கதையாக கொண்டுள்ளதால், வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் கனெக்ட் ஆகியுள்ளது.

பாசிடிவ் விமர்சனம்: படத்திற்கு ரசிகர்கள் தொடங்கி பல விமர்சகர்கள் வரை பாசிடிவான விமர்சனத்தையே கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் காம்பினேஷன் செம்மையாக இருக்கிறது என பாராட்டி வருகிறார்கள். படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்துள்ளார் பாண்டிராஜ் எனவும் விமர்சித்து வருகிறார்கள். மிகவும் சீரியஸான குடும்பக் கதையை செம ஜாலியாக அதுவும் அவரவர் குடும்பங்களில் நடப்பது போல படத்தை எடுத்துள்ளது, ரசிகர்களுக்கு செம விருந்தாக இந்த படம் அமைந்துவிட்டது.
ஹிட்: படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலமாக மாறி நிற்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவரது இசை படத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது. படத்தை கோவில், புரோட்டா கடை, நித்யா மேனன் வீடு என மூன்று லொக்கேஷனிலேயே கொண்டு போயிருந்தாலும் பாடல்களை நன்கு கலர் ஃபுல்லாக காட்டியுள்ளது எல்லாம் படத்திற்கு போனஸ்தான். படத்தில் இதுதான் மேஜர் மைனஸ் என சுட்டிக் காட்டும் அளவுக்கு எதுவும் இல்லாததே படத்திற்கு பிளஸ் தான். இந்த மாதத்தில் வெளியாகி ஹிட் அடிக்க உள்ள மற்றொரு தமிழ் படமாக இந்த படம் உருவெடுக்கும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

வசூல்: படத்திற்கு ஏகபோகமாக பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வந்துள்ளதால், படம் முதல் வாரம் முழுவதும் செம்மையாக கல்லா கட்டிவிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்நிலையில் படம் முதல் நாளில் ரூபாய் 4.5 கோடிகள் வரை இந்திய அளவில் வசூல் செய்திருக்கிறது என சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இப்படி இருக்கும்போது இந்த வசூல் கணக்கு என்பது இந்திய அளவில்தான். படம் உலக அளவில் குறைந்த பட்சம் சுமார் 8 கோடிகள் வரை வசூல் செய்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருவதால், வார இறுதி நாட்களில் படம் மிகப்பெரிய வசூலை அள்ளும் என படக்குழு நம்பிக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











