Thalaivan Thalaivi VS Maareesan BO: விஜய் சேதுபதியோடு மோதிய வடிவேலு.. பஞ்சரானது யார்?
சென்னை: ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இரண்டு படங்கள் நேற்று அதாவது ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதில் ஒரு படம் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்து வெளியான தலைவன் தலைவி. அதேபோல் மற்றொரு படம் அறிமுக இயக்குநர் சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் ஃபாசில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாரீசன். இந்த இரண்டு படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படம் எது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான தலைவன் தலைவி படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு முதலே படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கிறார்கள் என்ற காரணத்திற்காகவே இந்த படத்தின் அப்டேட்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. படத்தில், யோகி பாபு, சென்ட்ராயன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், சரவணன், தீபா சங்கர், செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் பார்த்த ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

குறிப்பாக குடும்பக் கதையை அனைவரும் ரசிக்கும்படி, நகைச்சுவையாக எடுத்துள்ளார்கள் என்ற ரசிகர்களின் விமர்சனம் படக்குழுவினருக்கும் திருப்தியைக் கொடுத்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.
மாரீசன்: அதேபோல் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாரீசன் படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. வடிவேலு தனது செகண்ட் இன்னிங்ஸில் அடுத்தடுத்து கலக்கி வருவதாலும், படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருப்பதாலுமே படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. கோவை சரளாவும் வடிவேலும் இணைந்து நடித்துள்ளார்கள், ஆனால் படத்தில் இருவருமே நகைச்சுவை கதாபாத்திரத்தில் இல்லாமல், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளதே தனி கவனத்தை ஈர்த்தது.
நல்ல படம்: மாரீசன் படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவும், மாமன்னன் படத்திற்கு பின்னர் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் என இருவரும் இணைந்து நல்ல படத்தைக் கொடுத்துள்ளார்கள் எனவும் பாராட்டி வருகிறார்கள். மாரீசன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை பலம் சேர்த்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இன்றைய காலத்தில் ஒரு படத்தின் வணிக வெற்றி தான் படத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications











