Vijay Sethupathi: மல்லுவுட் மெஹா டீம் உடன் இணையும் விஜய் சேதுபதி... நிவின் பாலி கொடுத்த சர்ப்ரைஸ்
திருவனந்தபுரம்: மலையாளத்தில் இம்மாதம் 5ம் தேதி வெளியான 2018 என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூட் அந்தனி ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, குஞ்சாகோ போபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜூட் அந்தனி ஜோசப் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி, விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் ரீ-என்ட்ரி ஆகும் விஜய் சேதுபதி: இம்மாதம் 5ம் தேதி மலையாளத்தில் வெளியான 2018 திரைப்படம் யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது. டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, குஞ்சாகோ போபன், கலையரசன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூன் அந்தனி ஜேசப் இயக்கிய 2018ம் ஆண்டு கேரளாவில் பெய்த பெருமழையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது.
மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் இதுவரை 90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதனால் விரைவில் 100 கோடியை கிராஸ் செய்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 2018 வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிட்டார் இயக்குநர் ஜூட் அந்தனி ஜேசப். இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, ஜூட் அந்தனி ஜோசப் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது எடுத்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஜூட் அந்தனி ஜோசப் இயக்கிய முதல் படமான ஓம் சாந்தி ஓஷானா 2014ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நிவின் பாலி - ஜூட் அந்தனி ஜோசப் இணைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நிவின் பாலி - ஜூட் அந்தனி ஜோசப் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. நிவின் பாலி, விஜய் சேதுபதி இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்க, மற்ற நடிகர்கள், நடிகைகளும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கி வரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் தான் நித்யா மேனனுடன் இணைந்து 19(1)(a) என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே விஜய் சேதுபதியின் படங்களுக்கு கேரள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதனால், அவரும் நேரடி மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதனடிப்படையில் தற்போது நிவின் பாலியுடன் நடிக்க விஜய் சேதுபதி ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











