'புஷ்பா'வைத் தொடர்ந்து ஆமீர்கான் படத்தில் இருந்தும் விலகினர் விஜய் சேதுபதி.. இதுதான் காரணமா?
சென்னை: ஆமிர்கான் நடிக்கும் இந்திப் படத்தில் இருந்தும் விலகியுள்ளார், நடிகர் விஜய் சேதுபதி.
இந்தி நடிகர் ஆமிர்கான் ஹாலிவுட்டில் ஹிட்டான பாரஸ்ட் கம்ப் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
பாரஸ்ட் கம்ப் படத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோ டாம் ஹாங்ஸ், ராபின் ரைட், கேரி சினிஸ், சல்லி ஃபீல்ட் உட்பட பலர் நடித்துள்ளனர்.

6 ஆஸ்கர் விருது
ராபர்ட் ஸெமக்கிஸ் இயக்கிய இந்தப் படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஆறு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. 1994 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான இந்தப் படத்தை அனுமதி பெற்று இந்தியில் ரீமேக் செய்கின்றனர். லால்சிங் சத்தா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அத்வைத் சந்தன்
இதில்ல் ஆமீர்கான், டாம் ஹாங்ஸ் நடித்த கேரக்டரில் நடிக்கிறார். கரீனா கபூர், மோனா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அத்வைத் சந்தன் இயக்குகிறார். ஆமிர்கானே படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த வருடம் வெளியிட்டார் ஆமிர்கான்.

பரபரப்பை கிளப்பின
இதற்கு வரவேற்பு கிடைத்தது. கரீனா கபூரின் லுக்கும் வெளியிடப்பட்டு அதும் வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்புகள், கொல்கத்தா, கேரளா, கோவா, இமாச்சல் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தன. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

படப்பிடிப்புகள்
இந்நிலையில், கொரோனாவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சில மாதங்களுக்கு முன், இதன் ஷூட்டிங்கை துருக்கி சென்று நடத்தினார் ஆமிர்கான். அங்கு துருக்கி அதிபரின் மனைவி எமினி எர்டோகனை இஸ்தான்புல்லில் சந்திந்த புகைப்படங்கள் வைரலாயின.

விலகல் விஜய்
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிப்பதாக செய்திகள் வெளியாயின. இதை விஜய் சேதுபதியும் ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் படத்தில் நடிக்க அவர் ஆர்வமாகவும் இருந்தார். ஆனால், கொரோனாவால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து அந்த படத்தில் இருந்து இப்போது விலகியுள்ளார்.

கால்ஷீட் பிரச்னை
விஜய் சேதுபதி தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். மலையாளப் படம் ஒன்றிலும் நடித்து வரும் அவர், கால்ஷீட் பிரச்னை காரணமாக, தெலுங்கில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இருந்து விலகி இருந்தார். இப்போது ஆமிர்கான் நடிக்கும் படத்தில் இருந்தும் விலகியுள்ளார். இதைப் படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











