விஜய் சேதுபதி நீங்க இவ்வளவுதானா?.. மீண்டும் கிளம்பிய "அந்த" சர்ச்சை!

By Staff

சென்னை: சினிமா ஹீரோக்களை இறை தூதனுக்கு நிகராக கொண்டாடுபவன் இந்தியன். அதிலும் தமிழகத்தில் இந்த கூத்துக் கொடுமையெல்லாம் கேக்கவே வேணாம். அந்த மாஸ் ஹீரோக்களில் சிலரை தங்கள் தலைவனாகவும், இனத்தை மீட்க வந்த போராளியாகவுமெல்லாம் சித்தரித்துக் கொண்டாடிடுவான்.

எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் வரிசையில் சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகனால் 'தலைவன்' எனும் வார்த்தையால் கொண்டாடப்பட துவங்கி இருப்பவர் விஜய் சேதுபதி.

vijay sethupathi not cancelled his muralitharan bio pic

இந்நிலையில், இலங்கையை சேர்ந்த தமிழ் வம்சாவளி கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் ஹீரோவாக நடிக்க விஜய்சேதுபதி கமிட் ஆகியிருந்தார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளும், சர்வதேச தமிழ் உணர்வாளர்களும் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

காரணமாக, 'முத்தையா முரளிதரன் தன்னை எப்போதும் சிங்கள மனிதராகவேதான் எண்ணுகிறார். அவருக்கு தமிழர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மதிக்க தெரியாது. ஈழ இறுதிப் போருக்குப் பின், இலங்கையில் அமைதி திரும்பிவிட்டதாக சொல்லியவர். எனவே அவரை பற்றிய படத்தில், சுத்த தமிழனான விஜய் சேதுபதி நடிக்க கூடாது.' என்று கடுமையாக கொதித்தனர்.

விஜய் சேதுபதியும் யோசித்தார், அந்தப் பட கதை விவாதத்திலிருந்து நகர்ந்தார். உடனே 'தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டுவிட்டார் வி.சேதுபதி. பணத்தை விட இனமே முக்கியமென போற்றும் நாயகன்.' என்றெல்லாம் அவரை கொண்டாடினர்.

ஆனால் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விஜய் சேதுபதி ஒன்றும் அப்படத்திலிருந்து விலகவில்லையாம். கமிட் ஆனபடியேதான் இருக்கிறாராம். என்ன ஒன்று, தொடர்ந்து நடிக்க வேண்டியிருப்பதால் அப்படத்தில் நடிப்பதை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளாராம்!

அப்படியா விஜய் சேதுபதி? அவ்வளவுதானா நீங்கள்?.....என்கிறார்கள் உணர்வாளர்கள்.

என்னத்த சொல்ல!

- தாமிரா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X