Vijay sethupathi: விஜய் சேதுபதி -மஞ்சு வாரியர் காதல் காட்சிகள்.. வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்த ஹீரோ!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக முன்னதாக விஜய் சேதுபதி அதிகமான பேட்டிகளை கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இணைந்து நடித்து வரும் விடுதலை 2 படம் குறித்து அவர் தனது பேட்டியில் பேசியுள்ளார்.

விடுதலை படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் வாத்தியார் கேரக்டரில் மாஸ் காட்டினார் விஜய் சேதுபதி. இந்நிலையில் விடுதலை 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனக்கும் மஞ்சு வாரியருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் விஜய் சேதுபதி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Vijay sethupathi Maharaja movie Viduthalai 2 Manju warrier tamil cinema 2

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன. கடந்த ஜனவரியில் பொங்கல் வெளியீடாக கத்ரீனா கையிஃபுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. திரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதியின் மகாராஜா படம் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மகாராஜா படம்: மகாராஜா படம் இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் கடந்த ஆண்டில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவரது கேரக்டர் சிறிதாக இருந்தாலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

விடுதலை 2 படம்: இதையடுத்து அவரது கேரக்டரை விரிவாக்கி தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்து வரும் சூழலில் இன்னும் ஒரு மாத காலம் படத்தின் சூட்டிங் நீள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மகாராஜா படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, விடுதலை 2 படத்தில் தனக்கும் மஞ்சு வாரியருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இந்த லவ் ஸ்டோரியை வெற்றிமாறன் மிகச் சிறப்பாக அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த காட்சிகளை ட்ரிம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துமாறு வெற்றிமாறனிடம் கேட்டுக் கொண்டதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர்: விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் இடையிலான பிளாஷ்பேக் காட்சிகளுக்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் விடுதலை 2 படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இன்னும் சில தினங்களில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா செல்ல உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் காட்சிகள் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளது ரசிகர்களை மிகச் சிறப்பாக கவர்ந்துள்ளது. முன்னதாக அசுரன் படத்தில் தனுசுடன் இணைந்து நடித்திருந்தார் மஞ்சு வாரியர். அந்தப் படத்திலும் அவர்களுக்கு இடையில் மெல்லிய காதல் வெளிப்பட்டது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியுடன் சிறப்பான ரொமான்ஸ் காட்சிகளில் மஞ்சு வாரியர் நடித்துள்ளதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X