ஆண்ட்ரியா பெட்ல படுக்குறாரா?.. ஃப்ரிட்ஜ்ல படுக்குறாரா?.. 'மாஸ்க்’ பட விழாவில் விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை: வெற்றிமாறன் வழிகாட்டுதலுடன் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள மாஸ்க் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்கள் தான் சமூக வலைதளம் முழுவதும் தீயாக பகிரப்பட்டு வருகிறது.

எனக்கெல்லாம் ஜி.வி. பிரகாஷ் மியூசிக் போடவே மாட்டேங்கிறார் என்றும் ஆண்ட்ரியாவை சிறு வயது முதல் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இன்னமும் அப்படியே அழகும் இளமையும் குறையாமல் இருக்கிறார் என பேச அரங்கமே அதிர்ந்து விட்டது.

Vijay Sethupathi open minded speech about Andrea and GV Prakash at Mask Trailer Launch

கவின் நடிப்பில் கடைசியாக வந்த சில படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்காமல் போன நிலையில், மாஸ்க் மற்றும் ஹாய் உள்ளிட்ட படங்கள் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்க் டிரைலர் வெளியீட்டு விழா: விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமான கவின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். லிப்ட், டாடா என கவின் நடிக்கும் படங்கள் ரசிகர்களை கவர ஸ்டார் படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சுமாரான வரவேற்பை பெற்றது. நெல்சன் தயாரிப்பில் வெளியான ப்ளடி பெக்கர், சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கிஸ் படங்கள் ஃப்ளாப் ஆக அடுத்ததாக ஆண்ட்ரியாவுடன் கவின் நடித்துள்ள கிஸ் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. வெற்றிமாறன் மேற்பார்வையில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Vijay Sethupathi open minded speech about Andrea and GV Prakash at Mask Trailer Launch

ஜிவியை கலாய்த்த விஜய் சேதுபதி: வெற்றிமாறன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் ஜி.வி. பிரகாஷ் கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் படத்துக்கும் இசையமைத்துள்ளார். நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ் என் படத்துக்கு வொர்க் பண்ணவே வரமாட்டேங்கிறார் என்று மேடையிலேயே பேச, அடுத்து நம்ம படம் பண்ணுவோம் என ஜி.வி. பிரகாஷ் கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

ஆண்ட்ரியா ஃப்ரிட்ஜில் தூங்குறாரா?: சின்ன வயசுல பீச்ல ஒரு சிலையை பார்த்தேன், அந்த சிலை போலவே ஆண்ட்ரியா இருக்கிறார். நரசூஸ் காபி விளம்பரத்தில் நடித்த ஆண்ட்ரியா மாஸ்க் படம் வரை அப்படியே எப்படி அதே இளமையுடன் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் பெட்ல தூங்குறாரா? அல்லது ஃப்ரிட்ஜில் தூங்குறாரான்னே டவுட்டா இருக்கு, நாளைக்கு என் மகன் வந்து கூட ஆண்ட்ரியா எப்படி அப்படியே இருக்கிறார் என வியந்து பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என பேச ஆண்ட்ரியா சிரித்துவிட்டார்.

மாஸ்க் ரிலீஸ் எப்போ?: விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள மாஸ்க் திரைப்படம் வரும் நவம்பர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏழைக்கு கோபம் வந்தா அடிப்பான், பணக்காரனுக்கு கோபம் வந்தா ஏழையை வச்சு அடிப்பான் என மாஸ்க் டிரைலரில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களின் கவனைத்தை வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், கண்டிப்பாக இந்த மாஸ்க் படம் கவினுக்கு கம்பேக் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X