Vijay Sethupathi: தனது மகன் மகளுடன் இப்படியெல்லாம் நடந்துக்குவாரா விஜய் சேதுபதி.. நல்ல விஷயம்தான்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் சுவாரஸ்யமான நடிகர்களில் ஒருவர். ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், தனது நடவடிக்கைகளாலும் பலரது கவனத்தை ஈர்த்து, அன்பைப் பெற்றவர் விஜய் சேதுபதி. இவர் நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ள படம் விடுதலை பாகம் 2. இப்படியான நிலையில் தனது குடும்பத்தினருடன் குறிப்பாக தனது மகள் மற்றும் மகனுடன் தான் எப்படி இருப்பேன் என்பதை பகிர்ந்து கொண்டுள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, சினிமாவை நம்பி உழைத்தால் அதில் கட்டாயம் வெற்றி பெற முடியும் என எடுத்துக்காட்டாக கூறும் அளவுக்கு விஜய் சேதுபதியின் வளர்ச்சி சினிமாவில் இருந்துள்ளது. இவர், பல படங்களில் அட்மாஸ்பியர் நடிகராக இருந்து, அதன் பின்னர் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்து, அதன் பின்னர், தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தற்போது தனது 50வது படத்தில் மகாராஜாவாக உயர்ந்து நிற்கின்றார்.

விஜய் சேதுபதி பல இடங்களில் பேசும்போது, அவரது பேச்சு, அனைவரது வாழ்க்கையுடன் ஒன்றிப் போகும் அளவுக்கு இருக்கும். காரணம் அவர் கற்பனையாகவோ, அல்லது மேடைக்கு என எதையும் பேசுவதில்லை. அதனால் தானோ என்னவோ விஜய் சேதுபதியை பலருக்கும் பிடித்து விடுகின்றது. இப்படியான நிலையில் அவர் தனது குடும்பம் குறித்து குறிப்பாக தனது மகன் மற்றும் மகள் குறித்தும், அவர்களுடனான தனது உரையாடல் குறித்தும் பேசியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

அதிகாரம்: இது தொடர்பாக அவர் பேசுகையில், " நான் என்னுடைய மகன் சூர்யாவை அப்பா எனவும் மகள் ஸ்ரீஜாவை அம்மா எனவும்தான் கூப்பிடுவேன். அவர்கள் இருவருமே என்னை அதிகாரம் செய்வார்கள். தினமும் படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற விஷயங்களை நான் அவர்களுடன் பேசுவேன். குறிப்பாக படத்தில் ஒரு காட்சியை படமாக்கும்போது என்னவெல்லாம் செய்தோம், முன்னேற்பாடாக என்னவெல்லாம் செய்தோம் என்பதைப் பற்றி பேசுவேன்.
குழந்தை: எந்த விஷயமாக இருந்தாலும், நான் எனது மகன் மற்றும் மகளிடம் அவர்களின் கருத்தினைக் கேட்பேன். எனது குழந்தைகளின் மத்தியில் நான் அப்பா என்ற பிம்பத்தை உருவாக்க நினைப்பதில்லை. சில நேரங்களில் நான் தான் குடும்பத்தில் குழந்தை போன்று தெரியும்" என பேசியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

மகாராஜா: விஜய் சேதுபதி நடித்த அவரது 50வது படமான மகாராஜா சீனாவில் வெற்றிகரமாக வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தை ஜப்பானில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும். அதேபோல் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி, பீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











