Ajith: அஜித்துடன் இணையும் விஜய் சேதுபதி.. அவரே சொன்ன தகவல்.. ரசிகர்கள் செம குஷி!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் கடந்த 6ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. லைகா தயாரித்து மகிழ் திருமேனி இயக்கிய இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெறவில்லை. இது மட்டும் இல்லாமல், படம் வசூல் ரீதியாகவும் அடி வாங்கியது. இதனால் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அஜித்துடன் இணைவது குறித்து விஜய் சேதுபதி மனம் திறந்துள்ளார்.
அஜித் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த கார் ரேஸ் அக்டோபர் மாதம் வரை நடைபெறும் என்பதால் இதுவரை அஜித் படங்களில் நடிக்கப்போவதில்லை. இப்படியான நிலையில், அஜித் நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரீ மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில், படம் குறித்த அறிவிப்புகள் வந்ததில் இருந்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் படத்தில் அஜித்தின் லுக். செம மாஸாக இருக்கும் அஜித்தின் இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் உலகம் முழுவதும் செம ரீச் ஆனது. படம் குறித்து போஸ்டர்கள், அஜித்தின் லுக் உள்ளிட்டவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

அஜித் - விஜய் சேதுபதி: இப்படியான நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அஜித் உடன் எப்போது இணைந்து நடிப்பேன் என்பது குறித்து பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, அஜித்துடன் எப்போது இணைந்து படத்தில் நடிப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஏற்கனவே அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன், எனக் கூறினார்.

வில்லன்: விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோரின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், மாதவன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் வில்லனாக நடித்துள்ளார். ஜவான் படத்தில் ஷாரூக்கானுக்கே வில்லனாக நடித்தார். கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை தனது வில்லத்தனத்தில் கொடிகட்டிப் பறந்து வரும் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் கதாநாயகனான, அஜித்துடன் மட்டும் இன்னும் பணியாற்றவில்லை. இது தொடர்பாக விஜய் சேதுபதி ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

மகிழ்ச்சி : இந்நிலையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அஜித்துடன் இணைந்து நடிப்பதற்கு ஏற்கனவே வாய்ப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் எனக் கூறியுள்ளார். இவரது இந்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் டிரைன் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











