Bigg Boss Tamil 8: கமல் சார் பேசறது புரியாதுனு சொல்வாங்க.. பிக் பாஸ் மேடையில் விஜய் சேதுபதி ஓபன்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 கிட்டத்தட்ட 50 நாட்களை எட்டிவிட்டது. ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாகவே சென்ற சிசன் 8 நாளுக்கு நாள் மிகவும் ஜாலியாகவும் பரபரப்பாகவும் போகத் தொடங்கியுள்ளதால், ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், வாராவாரம் விஜய் சேதுபதி வரும் போது, விஜய் சேதுபதிக்காகவே இந்த சீசனைப் பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அதாவது நவம்பர் 23ஆம் தேதி எபிசோடில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் குறித்து பேசிய விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். கடந்த 7 சீசன்களைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், தனது பணிச்சுமை காரணமாக பிக் பாஸில் இருந்துகொண்டு விலகுவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக அமைந்தாலும், 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதைப்போலவே, விஜய் சேதுபதி பாராட்டுகளைப் பெற்றார்.

vijay sethupathi kamal haasan bigg boss tamil 8

குறிப்பாக, போட்டியாளர்களின் கமல்ஹாசன் போல் நீட்டி முழக்கி கேள்வி கேட்காமல், நேரடியாக மூஞ்சியில் அறைந்ததைப்போல் கேள்வி கேட்பதை பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக போட்டியாளர்களே பாராட்டினார்கள். வாராவாரம் போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்திக்கும்போதும், ஒரு பொதுவான கேள்வியைக் கேட்பார். அதற்கு போட்டியாளர்களின் ஒரு சில பதில் ஏற்புடையதாக இருக்கும். ஒருசில பதில் ரசிகர்களுக்கே எரிச்சலையும், இவன் நடிக்கறான்டா என்கின்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

விஜய் சேதுபதி: அந்த வகையில் 48வது நாளான நேற்றைய எபிசோடில், போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி, கடந்த 7 சீசன்களாக இல்லாதது இந்த சீசனில் என்ன இருக்கின்றது என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாத போட்டியாளர்கள் தாங்களாக எதுஎதையோ பதிலாகச் சொல்ல, விஜய் சேதுபதி மட்டும் இல்லாமல், பார்வையாளர்களும் டையர்ட் ஆகிவிட்டார்கள்.

vijay sethupathi kamal haasan bigg boss tamil 8

கமல்: இந்தக் கேள்விக்கு நடிகரும் போட்டியாளருமான ரஞ்சித் பதில் அளிக்கும்போது, " இந்த சீசனில் நீங்கள் அதாவது விஜய் சேதுபதி இருப்பதுதான், சிறப்பும் வித்தியாசமும்" எனக் கூறினார். இந்த பதிலைக் கேட்ட விஜய் சேதுபதி ஒருநொடி ஆடிப்போய்விட்டார். அதன் பின்னர், " ரஞ்சித் சார், இந்த இடத்தில் இதற்கு முன் இருந்தவர் ரொம்ப பெரியவர். அவர் இங்கு பல விஷயங்களைச் செய்துவிட்டுப் போயுள்ளார். அவருடன் படத்தில் நடிக்கும்வரை நான் எதோ செய்கின்றேன் என நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், அவருடன் வேலை செய்த பின்னர்தான், நான் எதுவுமே செய்யவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

vijay sethupathi kamal haasan bigg boss tamil 8

புரியல: மேலும் படப்பிடிப்புத் தளத்தில் அவர் பேசுவதைக் கேட்கும்போது, நமக்கு நிறைய அறிவு கிடைக்கும். பொதுவாக கமல் சார் பேசுவது புரியாதுனு சொல்லுவாங்க. ஆனால் அவர் பேசினால் நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் நமக்கு கிடைக்கும். அவர் இருந்த இடத்தில் இன்றைக்கு நான் நின்று கொண்டு இருப்பதையே பெருமையாகக் கருதுகின்றேன்" என பதில் அளித்தார். இவரது பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

vijay sethupathi kamal haasan bigg boss tamil 8

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X