நடிப்புக்கு எந்த ஃபார்முலாவும் இல்லை.. கோவாவில் குஷ்பு கேட்ட கேள்விக்கு விஜய்சேதுபதி ’நச்’ பதில்!
கோவா: சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்சேதுபதியிடம் நடிகை குஷ்பு கேள்வி கேட்ட கேள்விகளுக்கு விஜய்சேதுபதி பதில் அளித்துள்ளார்.
IIFI 54 கோவாவில் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனியும் கோவாவில் தான் திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருப்பதாக போஸ்ட்டுகளை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் விஜய்சேதுபதியின் திரை அனுபவம் குறித்து குஷ்பு கேள்விகளை அடுக்க அதிரடியாக விஜய்சேதுபதி பதில் அளித்துள்ளார்.
50 படங்களை கடந்த விஜய்சேதுபதி: புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து வந்த விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், 50 படங்களுக்கு மேல் விறுவிறுவென பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி உள்ளார். ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து மிரட்டி வருகிறார் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதியிடம் குஷ்பு கேள்வி: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்து வரும் விஜய்சேதுபதி, ஹீரோவாகவும் தொடர்ந்து நடித்து இரண்டையுமே பேலன்ஸ் செய்து வருகிறார். இதுபற்றி நடிகை குஷ்பு கேள்வி எழுப்பிய நிலையில், "எனக்கு எதுவும் தெரியாதுன்னு எனக்கு தெரியும். ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பாக அதுதொடர்பாக சினிமாவில் உள்ள அறிவாளிகளுடன் அதுதொடர்பாக விவாதங்களை நடத்தி எனக்கு புரிந்து கொண்டதை நடித்து வருகிறேன்" என்றார்.

எந்த ஃபார்முலாவும் இல்லை: வெர்சடைலாக நடிக்கிறீங்களே எப்படி? என்கிற கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, "நடிப்புக்கு எந்தவொரு ஃபார்முலாவும் இல்லை.. ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் அதற்கான சுதந்திரத்தை நமக்கு கொடுத்து விட்டாலே அதற்கேற்ப மனம் ட்யூன் ஆகி நடித்து விடும்" என்றார்.

திருநங்கையாக நடித்த அனுபவம்: சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்து தேசிய விருது வென்ற விஜய்சேதுபதி அதுகுறித்த அனுபவத்தையும் அந்த மாஸ்டர் கிளாஸ் அரங்கில் எடுத்துரைத்தார். மேலும், நடிகை குஷ்புவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











