twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி.. இயக்குனர் சீனு ராமசாமி தகவல்!

    By
    |

    சென்னை: முரளிதரன் பயோபிக்கில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி விட்டதாக, இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

    இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    தமிழ் அமைப்புகள் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    'நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட்' நிஷாவால் கொதித்துப்போன வேல்முருகன்.. நாரதர் வேலை பார்த்த பாலாஜி!'நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட்' நிஷாவால் கொதித்துப்போன வேல்முருகன்.. நாரதர் வேலை பார்த்த பாலாஜி!

    முரளிதரன் பயோபிக்

    முரளிதரன் பயோபிக்

    இந்தப் படத்துக்கு '800' என தலைப்பு வைத்துள்ளனர். 'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு அதிகரித்தது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டானது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இயக்குனர் பாரதிராஜாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    சிரித்து மகிழ்பவர்

    சிரித்து மகிழ்பவர்

    'நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எனவே அவர் படத்தில் அந்தப் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்' என்று கூறியிருந்தார்.

    கருத்து தெரிவிக்காமல்

    கருத்து தெரிவிக்காமல்

    இயக்குனர்கள், சீனு ராமசாமி, சேரன், பாடலாசிரியர் தாமரை உள்பட பலரும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்திருந்தனர். சில அரசியல் அமைப்புகளும் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன. இதற்கிடையே நடிகை ராதிகா, சரத்குமார் ஆகியோர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    விலகிக் கொள்ளுமாறு

    விலகிக் கொள்ளுமாறு

    இந்நிலையில், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், 'எனது சுயசரிதை படமான 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று விஜய் சேதுபதிக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை, அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

    நன்றி வணக்கம்

    நன்றி வணக்கம்

    அவருடைய இந்த அறிக்கையை ட்விட்டரில் பதிவிட்டுள்ள, விஜய் சேதுபதி நன்றி, வணக்கம் என்று கூறியுள்ளார். இதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில், 'தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல், எப்போதும் போல, எளிமையாக நன்றி வணக்கம் என்று, தன்னை நாடி வந்தவருக்கு விடை தந்து, தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த மக்கள்செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

    Recommended Video

    Vijay Sethupathi 800 Movie Press meet | 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி
    விலகிய உண்மைதான்

    விலகிய உண்மைதான்

    இதுபற்றி இயக்குனர் சீனு ராமசாமியிடம் கேட்டபோது, விஜய் சேதுபதி இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டது உண்மைதான் என்று கூறினார். இதற்கிடையே, அதென்ன நன்றி, வணக்கம்? தெளிவாக, இந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொல்ல வேண்டியதுதானே என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    English summary
    Vijay Sethupathi has quit the biopic on Sri Lankan spin legend Muthiah Muralidaran called 800.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X