லோகேஷ் கனகராஜின் மாநகரம் ரீமேக் டூ தலைவன் விஜய் சேதுபதிக்கு இந்தியா முழுவதும் உள்ள செல்வாக்கு!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்து வரும் படம் தலைவன் தலைவி. படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. இந்த வாரமும் படத்திற்கு அதிகப்பட்டியான காட்சிகள் பல திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன் சில தினங்களுக்கு முன்னர் அவரும் விஜய் சேதுபதியும் ஏற்கனவே இணைந்து நடித்த மலையாளப் படமான 19 படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆனது தொடர்பாக புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் 'Pixelated Pigeon' என்ற பெயரில் உள்ள ரசிகர் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் அல்லாத தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்த படங்களை பட்டியலிட்டுள்ளார். இது விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.

Akhaada - கன்னட மொழில பல பிரச்சனைக்கு பிறகு வந்த இந்த படம், தமிழ்ல "எடக்கு" அப்படின்னு போஸ்டர் இருக்கு, இந்த படம் தமிழ்ல ஹீரோ ஆவதற்கு முன்னாடியே நடிச்ச படம், அவரோட லுக் பழைய புதுப்பேட்டை வந்த மாதிரி இருக்கு. ( இப்படம் 2019ஆம் ஆண்டு யூடியூப் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது). Maarconi Mathaai - இந்த படத்துல கதாபாத்திரமாக நடிக்காம, விஜய் சேதுபதி ஆகவே படத்துல வருகிறார். இதுதான் அவரது முதல் மலையாள படம். இந்த படத்தின் கதைப்படி, அவரது பட புரமோசனுக்கு கேரளாவுக்கு போவது போல் படத்தில் வருகிறார்.

Vijay Sethupathi Other Language Movies list Goes Trending After Thalaivan Thalaivi Hit
Photo Credit:

தெலுங்கு: Sye Raa Narasimha Reddy - தெலுங்கில் வந்த இந்த படத்தின் மூலம் மெகா ஸ்டார் சிரஞ்சீவிவுடன், தமிழ் போர்வீரன் "ராஜ பாண்டியன்" கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன் முறையாக நடித்தார். Uppena - இது தெலுங்கில் நடித்த இரண்டாவது படமாகும். இந்த மெஹா ஹிட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார். ஹீரோயினின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பவர்ஃபுல் கதாபாத்திரமாக அமைந்ததால் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். 19(1)(a) - மலையாளத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இது தான் மலையாளத்தில் கதாபாத்திரத்தில் நடித்த முதல் படம்.

மாநகரம் ரீமேக்: Michael - சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்த இந்த கேங்ஸ்டர் வகை தெலுங்கு படத்தில், விஜய் சேதுபதி ஹீரோவின் காட் ஃபாதராக நடித்துள்ளார். இந்த படத்தை தமிழில் "இஸ்பெட் ராஜாவும், இதய ராணியும்" படத்தை இயக்கிய "ரஞ்சித் ஜெயக்கொடி" இயக்கினார். Mumbaikar - தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் தான் "Mumbaikar" படம். இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்த படம் தான் விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்த முதல் படம். இந்த படத்தில் "முன்னு" அப்படிங்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

Vijay Sethupathi Other Language Movies list Goes Trending After Thalaivan Thalaivi Hit
Photo Credit:

அடுத்தடுத்து ஹிட்: Jawan - ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஹிந்தியில் மெகா ஹிட் படமான "ஜவான்" படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி " Kalee Gaikwad" அப்படிங்கிற கதாபாத்திரத்துல மிரட்டி இருந்தார். Merry Christmas - முதல் முறையாக ஹிந்தில ஹீரோவாக நடித்த படம்னா அது "Merry Christmas" தான். இந்த படத்தில் காத்ரினா கைஃப் உடன் நடித்திருந்தார். அதனால காத்ரினா தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் அப்படின்னு சொல்றவங்களும் உண்டு" இவ்வாறு அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X