மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா?

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சென்னை: ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஓ மை கடவுளே'.

இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இறுதிசுற்று நாயகி ரித்திகா சிங் நடித்துள்ளார்.

Vijay Sethupathi play a powerful role in Oh My Kadavule Movie

மேலும், மீசையை முறுக்கு, நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்த யூடியூப் பிரபலம் சாரா நடிக்கிறர்.

சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படும் வாணி போஜனும் இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார்.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தனது டிவிட்டர் பக்கத்தில் 'ஓ மை கடவுளே' படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒரு பவுர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அதனை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

நாயகனாக பல படங்களில் விஜய் சேதுபதி நடித்து வந்தாலும், அவ்வப்போது, இதுபோன்ற சிறப்பு தோற்றங்களில் நடித்து, சக நடிகர்களும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகிறார்.

காதல், கல்யாணம், பிரிவு என்ற கான்செப்டில் காமெடி கலந்த காதல் படமாக 'ஓ மை கடவுளே' உருவாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்த படக்குழு தற்போது ரிவீல் செய்துள்ளனர்.

ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்கவுள்ள விஜய்சேதுபதிக்கு பத்து கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நட்புக்காகவும், நடிப்புக்காகவும் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து வருவதால் தான் அவரது ரசிகர்கள் அவரை மக்கள் செல்வனாக கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X