கார்ப்பரேட் பக்கம் திரும்பும் கேவி ஆனந்த்

By Manjula

சென்னை: கேவி ஆனந்த் படத்தில் விஜய் சேதுபதி கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞராக நடிக்கவுள்ளார்.

நானும் ரவுடிதான் ஹிட்டுக்குப் பின் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. தற்போது ஒரே நேரத்தில் றெக்க, ஆண்டவன் கட்டளை உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

Vijay Sethupathi Play Corporate Guy

விஜய் சேதுபதி-டி.ராஜேந்தரை வைத்து கேவி ஆனந்த் இயக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது.

இதில் விஜய் சேதுபதி கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராகவும், டி.ராஜேந்தர் கார்ப்பரேட் நிறுவனத்தின் ஏஜென்ட்டாகவும் நடிக்கவிருக்கின்றனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளராகவும், அபி நந்தன் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பெயரிடப்படாத இப்படத்துக்கு ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொருபுறம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் இறைவி உலகம் முழுவதும் வருகின்ற 3ம் தேதி வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X