twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்தக்காட்சிக்கு மறுத்த விஜய் சேதுபதி..’96’ பட சுவாரஸ்யம்..இதனால் தான் படம் பெருவெற்றி பெற்றதா?

    |

    விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 படம் பெரு வெற்றி பெற்றது. இதற்கு காரணம் இயக்குநர் சொல்வதை மீறி தான் எடுத்த சில முடிவுகள் தான் என தற்போது விஜய்சேதுபதி பேட்டி அளித்துள்ளார்.

    Recommended Video

    Viduthalai | தவிப்பில் Soori,Vijaysethupathi-யால் தான் படம் தள்ளிபோகுதா?

    விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படம் வித்தியாசமான புதிய அணுகுமுறையுடன் கூடிய கதை என்பதால் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.

    ஜானு பாத்திரம் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் அசால்ட் நடிப்பையும் ரசிகர்கள் மறக்கவில்லை.

    தம்பியை தொடர்ந்து அண்ணனுடன் கூட்டணி வைக்கும் விருமன் இயக்குநர்: சூர்யா ரசிகர்களுக்கு சம்பவம் ரெடிதம்பியை தொடர்ந்து அண்ணனுடன் கூட்டணி வைக்கும் விருமன் இயக்குநர்: சூர்யா ரசிகர்களுக்கு சம்பவம் ரெடி

     விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் உருவான ‘96’ படம்

    விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் உருவான ‘96’ படம்

    நடிகர் விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் '96' இந்தப்படம் மிகவும் வித்தியாசமான கதையமைப்பு கொண்டதால் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. பள்ளிப் பருவத்தில் படித்து பிரிந்து சென்றவர்கள் ஒரு காலகட்டத்தில் மீண்டும் சந்திப்பது என்பது வழக்கமான நடைமுறை. இதை வைத்து பின்னப்பட்ட கதை தான் இது. பள்ளிப்பருவத்தில் பிரிந்த பழைய மாணவர்கள் கெட் டு கெதராக ஒன்று சேர்கின்றனர். இதில் விஜய் சேதுபதி உயிருக்குயிராய் காதலித்து பிரிந்த திரிஷாவை சிங்கப்பூரில் இருந்து அழைத்து வருகின்றனர் பள்ளி நண்பர்கள்.

    பள்ளி நண்பர்களை சந்திக்க சிங்கப்பூரிலிருந்து வரும் திரிஷா

    பள்ளி நண்பர்களை சந்திக்க சிங்கப்பூரிலிருந்து வரும் திரிஷா

    சிறு வயதில் காதலித்து பிரிந்துச் சென்ற திரிஷாவிற்காக விஜய் சேதுபதி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார். சிறுவயதில் காதலை சொல்ல முடியாமல் பின்னர் பிரிந்தபின் திரிஷா நினைவாகவே வாழ்ந்து வருகிறார். புகைப்பட கலைஞராக ஊர் ஊராக அலைகிறார். நல்ல வருமானம், நண்பர்கள் திருமணம் செய்ய வற்புறுத்தினாலும் மறுக்கிறார். அவருடன் படித்த அனைவரும் திருமணம் பிள்ளை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பள்ளி நண்பர்களை சந்திக்க சிங்கப்பூரில் இருந்து வருகிறார் திரிஷா. பள்ளி மாணவர்கள் குழுவில் அனைவரும் திருமணமாகி குடும்பத்துடன் சந்திக்கும் நிலையில் அனைவரது எண்ணமும் திரிஷா, விஜய் சேதுபதி சந்திப்பில் என்ன நடக்கும் என்பதே சஸ்பென்ஸாக உள்ளது.

    படத்தின் பிரதான வெற்றிக்கு காரணம் இதுதான்

    படத்தின் பிரதான வெற்றிக்கு காரணம் இதுதான்

    இந்தப் படத்தின் பெரிய வெற்றியே காதலர்கள் இருவரும் கண்ணியமாக நடந்து கொள்வதாக காட்சி அமைக்கப்பட்டதில்தான் இருந்தது. இந்த படத்தை பற்றி தற்போது தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி படத்தின் முக்கிய விஷயம் ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இந்தப்படத்தில் ஆரம்பத்திலிருந்து கதாநாயகி ஜானுவை (திரிஷா) ஹீரோ விஜய் சேதுபதி தொடாமலேயே நடித்திருப்பார். இப்படிப்பட்ட காட்சிகள் அமைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும், கடைசியில் இருவரும் பிரியும்போது லிப் லாக் கொடுக்க வேண்டும் என்று படக்குழு தரப்பில் சொன்னபோது அதை மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் பிடிவாதம்

    விஜய் சேதுபதியின் பிடிவாதம்

    மேலும் அவரது பேட்டியில், ரசிகர்கள் ஒரு கௌரவமான காதலர்களை எதிர்பார்க்கிறார்கள் லிப் லாக் கொடுத்தால் அது பின்னர் இது போன்று கெட் டு கெதர் வருபவர்கள் லிப் லாக் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் ஆகவே ரசிகர்கள் எதிர்பார்ப்பின்படி இந்த இரண்டு பாத்திரங்களையும் கௌரவமாக காட்சிப்படுத்தவேண்டும். லிப் லாக் போட்டு அடிப்பது போன்றவை இல்லாமல் காட்சிகள் அமைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும் அதன்படியே படமெடுக்கப்பட்ட படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

    ரசிகர்களின் மன நிலையை படிக்கும் விஜய் சேதுபதி

    ரசிகர்களின் மன நிலையை படிக்கும் விஜய் சேதுபதி

    அது மட்டுமல்ல தன்னுடைய பல படங்களில் ரசிகர்களின் மனநிலையை அறிந்து என்ன சிந்திப்பார்கள் என்பதை மனக்கண்ணில் ஓட்டி காட்சிகளை அமைக்க கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த முடிவால் படம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. காரணம் 96 படத்தில் சிறு வயதில் பிரிந்த காதலர்கள் பின்னர் திரிஷாவுக்கு திருமணம் ஆன நிலையில் கெட் டு கெதருக்காக வருபவர் தன்னுடைய பழைய காதலனை சந்திக்கிறார். இந்த காதல் மிகவும் கௌரவமாக காட்சிப்படுத்த வேண்டும் என்பதை விஜய் சேதுபதி வலியுறுத்தியுள்ளது நல்ல விஷயம்.

    மோகமோ, முத்தமோ படத்தை வேறு திசைக்கு மாற்றி இருக்கும்

    மோகமோ, முத்தமோ படத்தை வேறு திசைக்கு மாற்றி இருக்கும்

    இதில் சிறிதளவு மோகமோ, ஆபாசமோ கலந்திருந்தால் படத்தின் பிரதான நோக்கமே அடிபட்டிருக்கும் என்பது உண்மை. தனது காதலை சொல்ல தயங்கியதால் காதலை இழந்த அந்த தருணத்தை நினைத்து இருவரும் வருந்துவதும், இரவு தனிமையில் இருவரும் பல விஷயங்களை பேசுவதும், விஜய் சேதுபதியின் தீவிர காதலை அறிந்த திரிஷா வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் பிரியும் காட்சியும் கொஞ்சம் கூட ஆபாசம் கலக்காமல் படமாக்கிய விதம் அருமை. அந்த வகையில் ரசிகர்களின் மனங்களை மட்டுமல்ல பொதுவான யதார்த்த நிலையையும் அறிந்து படக்குழுவை வற்புறுத்தி காட்சி அமைக்க வைத்த விஜய் சேதுபதிக்கு பாராட்டு தெரிவிக்க தான் வேண்டும்.

    English summary
    '96' starring Vijay Sethupathi and Trisha was a super hit. Vijay Sethupathi has now given an interview that the reason was that he insisted the director not to put some scenes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X