twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்த்தி படத்துல நடிக்க கிடைத்த வில்லன் சான்ஸ்.. நோ சொன்ன விஜய் சேதுபதி.. என்ன பிரச்சினை?

    |

    சென்னை : நடிகர் கார்த்தி தன்னுடைய அண்ணனை போலவே மிகவும் பிசியான நடிகராக காணப்படுகிறார்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் பிசியாக காணப்படுகின்றனர். மேலும் இவரின் அண்ணி ஜோதிகாவும் ஒரு பக்கம் தேர்ந்தெடுத்தப் படங்களில் நடித்து வருகிறார்.

    கார்த்தியின் நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

    மணிரத்னம் ஏன் இப்படி செய்தார்...டீசர் விழாவில் ஏன் இத்தனை சொதப்பல்...ஆதங்கத்தை கொட்டும் ரசிகர்கள் மணிரத்னம் ஏன் இப்படி செய்தார்...டீசர் விழாவில் ஏன் இத்தனை சொதப்பல்...ஆதங்கத்தை கொட்டும் ரசிகர்கள்

    நடிகர் கார்த்தி

    நடிகர் கார்த்தி

    நடிகர் கார்த்தி முதலில் உதவி இயக்குநராகத் தான் கோலிவுட்டில் தன்னுடைய பயணத்தை துவக்கினார். ஆனால் இவரை பார்த்த இயக்குநர் அமீர் இவரை தன்னுடைய பருத்தி வீரன் படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தார். அதுமுதல் கார்த்திக்கு எல்லாமே ஏறுமுகம் தான். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

    பருத்தி வீரன் படம்

    பருத்தி வீரன் படம்

    வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி நடித்திருந்த இந்தப் படம் அவருக்கு கோலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல கெட்டப்புகளில் நடித்து வரும் கார்த்திக்கு மட்டுமே அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக சூட் ஆகிறது.

    வித்தியாசமான கெட்டப்புகள்

    வித்தியாசமான கெட்டப்புகள்

    கார்த்தி சாக்லேட் பாயாக நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதே கைதியாக நடித்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார் அதற்கும் சிறப்பான ரெஸ்பான்ஸ் ரசிகர்களிடையே காணப்பட்டது. கிராமத்து கெட்டப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து அதற்காகவும் வரவேற்பை பெற்றார் கார்த்தி.

    அடுத்தடுத்த படங்கள்

    அடுத்தடுத்த படங்கள்

    தற்போது கார்த்தி நடிப்பில் 3 படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.

    ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி

    ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி

    இதனிடையே குக்கூ, ஜோக்கர் படங்களின் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் அடுத்ததாக இணையவுள்ளார் நடிகர் கார்த்தி. கார்த்தி நடித்திருந்த தோழா படத்திற்கு ராஜூ முருகன்தான் வசனம் எழுதியிருந்தார். இந்த தொடர்பால் தற்போது கார்த்தியை இயக்கும் வாய்ப்பு ராஜூ முருகனுக்கு கிடைத்துள்ளது.

    வில்லன் கேரக்டரை மறுத்த விஜய் சேதுபதி

    வில்லன் கேரக்டரை மறுத்த விஜய் சேதுபதி

    இந்தப் படத்தின் முன்தயாரிப்பு பணிகள் நடந்துக் கொண்டிருக்கும் சூழலில் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் டேட்ஸ் இல்லை என்று கூறிய விஜய் சேதுபதி 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம். ஆனால் இந்த சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் இந்த யோசனையையே கைவிட்டு விட்டதாம்.

    பிசியான வில்லனாக மாறியுள்ள விஜய் சேதுபதி

    பிசியான வில்லனாக மாறியுள்ள விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி தொடர்ந்து ரஜினி, விஜய், கமல் உள்ளிட்டவர்களுக்கு வில்லனாக மிரட்டியுள்ளார். இதனால் இவருக்கு வில்லன் பட வாய்ப்புகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது. தற்போது ஷாருக்கான், அல்லு அர்ஜூன் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல நிறுவனத்தின் வெப் தொடரில் நடிக்க 35 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Vijay Sethupathi refused to act as a villain in Karthi movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X