இனியா லீட் ரோலில் நடிக்கும் "காஃபி" படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

சென்னை : நடிகை இனியா தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

பாடகசாலை,மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், வாகை சூடவா, பொட்டு என எண்ணற்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இனியா லீட் ரோலில் நடித்துள்ள காஃபி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

நெகட்டிவ் கதாபாத்திரத்தில்

நெகட்டிவ் கதாபாத்திரத்தில்

மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை இனியா தமிழில் பாடசாலை மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மௌனகுரு, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சென்னையில் ஒரு நாள் என்ற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வேறு விதமான நடிப்பை வெளிக்காட்ட இனியாவுக்கு அதைத் தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரங்களும் சர்ச்சைக்குரிய பாத்திரங்களும் வரிசைகட்டி வரத்தொடங்கின. நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் மீண்டும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்தது இவரின் மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்தது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில்

மீண்டும் பழையபடி ஃபார்ம்புக்கு வருவதற்காக தொடர்ந்து ஹீரோயினாக மட்டும் நடித்து வரும் இனியா கடைசியாக படத்துடன் இணைந்து பொட்டு என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இனியாவுக்கு தமிழில் எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில் அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் இப்பொழுது நடித்துள்ளார்.

காஃபி

காஃபி

தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக உள்ள கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா,தமன்னா என பலரும் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது நடிகை இனியாவும் இணைந்துள்ளார். இயக்குனர் சாய் கிருஷ்ணா இதில் உருவாகியுள்ள இந்த திரில்லர் படத்திற்கு காஃபி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்

பிரசன்னா பாலா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சதீஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இதுவரை ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வந்த இனியா இப்போது முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்துள்ளார். இந்த நிலையில் காஃபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில் இனியா பாழடைந்த பங்களாவில் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் மரண பீதியில் நின்று கொண்டிருக்கிறார். போஸ்டரை பார்க்கும்போதே இப்படம் திரில்லர் கதை களத்தில் ஒரு உருவாகி உள்ளது என்பது நமக்கு தெரிகிறது. இனியாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள காஃபி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X