கர்ஜிக்கு ரெடியாகும் திரிஷா.. புரோமோவை வெளியிட்ட விஜய் சேதுபதி

சென்னை: திரைத்துரையில் 15 வருடங்களுக்கும் மேலாக கோலொச்சி வருபவர் நடிகை த்ரிஷா. நடுவில் திருமணம் நிச்சயம் செய்து பின் டிராப் ஆகி மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 96 படத்தில் ஜானுவாக நடித்து அனைவரின் மனம் கவர்ந்தார்.

இந்த நிலையில் 2015 ம் ஆண்டு நடிகை அனுஷ்கா சர்மாவின் நடிப்பில் வெளியான இந்தி த்ரில்லர் படம் NH 10 படத்தின் ரீமேக் ஆக கர்ஜனையில் கர்ஜிக்க வருகிறார். இப் படத்தின் ப்ரமோவை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

vijay sethupathi releases garjanai promo

'இவங்களுக்கு பயந்து உயிரை விடனுமா? என்ற வசனத்துடன் ஆரம்பமாகும் இந்த டீசரில் த்ரிஷாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. முன்னதாக தூங்காவனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடிகை த்ரிஷா ஆக்‌ஷன் கலந்த காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவர் தயங்காமல் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

இப் படத்தின் இயக்குநர் சுந்தர் பாலு. சின்னத்திரை தம்பதி அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீ்ரஞ்சனி, வடிவுக்கரசி, வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். அம்ரேஷ் கணேஷின் இசை, ஒளிப்பதிவாளர் சிட்டி பாபு. இந்தப் படத்தை செஞ்சுரி இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே மைனா, சாட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.

த்ரிஷாவின் நடிப்பில் ராங்கி, சதுரங்க வேட்டை 2,பரமபதம் விளையாட்டு, குற்ற பயிற்சி மற்றும் சிம்ரனுடன் நடிக்கும் படம் என வரிசையாக அணி வகுத்து நிற்கின்றன.

இதனிடையே ஹீரோயினை மையப் படுத்திய படங்களான மோகினி மற்றும் நாயகி கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அதிரடி படமான கர்ஜனை வெற்றியடையும் நிலையில் த்ரிஷா விமன் சென்ட்ரிக் படங்களில் ஒரு ரவுண்ட் வருவார். அதே போன்று மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்திய ஆடை மற்றும் கொலையுதிர் காலம் அந்த அளவிற்கு திரையில் சோபிக்காத நிலையில் கர்ஜனை தலைப்பில் மட்டுமா இல்லை வெற்றியிலுமா என்று பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X