twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் சம்மதித்தேன்.. மாஸ்டர் படம் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!

    |

    Recommended Video

    Thalapathy Vijay in Tragedy | Master Shooting Spot | Vijay Sethupathi

    சென்னை: மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் சம்மதித்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விஜய் சேதுபதி.

    சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வருகிறது மாஸ்டர்.

    ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறுகின்றனர்.

    கிளைமேக்ஸ்

    கிளைமேக்ஸ்

    மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சியுடன் ஷூட்டிங் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் தொடங்கிய ஷூட்டிங், டெல்லி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கிளைமேக்ஸ் சண்டை காட்சி நடைபெறும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

    விஜய்க்கு வில்லன்

    விஜய்க்கு வில்லன்

    கடந்த ஆண்டு வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் 3வது லுக் போஸ்டரில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி வெறித்தனமாக மோதிக் கொள்ளும் காட்சி ரசிகர்களிடையே வேற லெவலில் வைரலானது.

    விஜய்சேதுபதி பேட்டி

    விஜய்சேதுபதி பேட்டி

    காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ள அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படத்தின் புரொமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஜய்சேதுபதி, விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் ஒப்புக் கொண்டேன் என்பதை முதன்முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.

    வில்லனாக ஏன்?

    வில்லனாக ஏன்?

    ஹீரோவாக நடித்து வந்தாலும், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவும் தான் தயங்க வில்லை என்றும், இமேஜ் பற்றிய கவலையோ, பயமோ தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜ், அந்த கதாபாத்திரம் குறித்து விளக்கும் போது அவ்வளவு பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

    மிஸ் பண்ணியிருப்பேன்

    மிஸ் பண்ணியிருப்பேன்

    மேலும், இமேஜை எல்லாம் பார்த்துக் கொண்டு வில்லன் ரோல் வேண்டாம் நடிச்சா ஹீரோ தான் என்று பந்தா காட்டினால், அப்படி ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தை தனது வாழ்நாளில் மிஸ் பண்ணியிருப்பேன் என நடிகர் விஜய் சேதுபதி அந்த பேட்டியில் ஓப்பனாக கூறியுள்ளார்.

    தல அஜித் உடன்

    தல அஜித் உடன்

    மேலும், தல அஜித் உடன் நடிப்பீங்களா? என்ற கேள்விக்கு, ஒரு நொடி சிரித்து விட்டு, அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், கண்டிப்பா ஓகே சொல்லி செய்வேன் எனவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். மாஸ்டர் படத்தில் மெர்சலான வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியை ஜாலியான கடவுளாக ஓ மை கடவுளே படத்தில் பார்க்கப் போகிறோம்.

    அடுத்தடுத்து

    அடுத்தடுத்து

    அதுமட்டுமின்றி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் என பல படங்கள் வரிசை கட்டி ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன. இந்த ஆண்டு விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Now, Vijay Sethupathi has revealed the reason behind accepting the negative role opposite Vijay who is the protagonist in 'Master'. In a recent interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X