தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி இவருக்கு மகனாக நடிக்கிறாராம்.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியில் ரோல் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் தலைவன் இருக்கின்றான். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் வடிவேல் ஆகியோர் நடிக்கவுள்ளனர். கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி இந்தியன் 2 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை சில காரணங்களால் ஏற்க முடியவில்லை.

தலைவன் இருக்கின்றான்
ஆனால் உங்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும், எனக்கு வாய்புத் தாருங்கள் என கேட்டார். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய கமலும் விஜய் சேதுபதியும் ஒன்றாக நடிப்பதை சொல்லாமல் சொன்னனர்.

தேவர்மகன் 2
படத்தின் பிரி புரடெக்ஷன் பணிகள் பொள்ளாச்சி அருகே தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனே இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைவிட முக்கியமாக தேவர் மகன் படத்தின் 2 ஆம் பாகமாக இப்படம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் சேதுபதியின் ரோல்
மேலும் இந்தப் படத்தில் இளம் நடிகர் ஒருவர் கமலுடன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. கமலின் தலைவன் இருக்கின்றான் படம் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நாசருக்கு மகன்
அதாவது தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாசருக்கு மகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 1992ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் படத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கவுதமி, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். தந்தையின் மரணத்திற்கு பிறகு கிராம மக்களின் பிரச்சனையை தீர்க்கும் சக்திவேலாக கமல்ஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











