மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதிக்கு இந்த கேரக்டரா..?
Recommended Video

சென்னை : மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே.
இவர் கடைசியாக இயக்கி கார்த்தி, அதிதி ராவ் நடித்து வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி வந்து பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கியது.
இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி - சிம்பு
மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இசைக்கோர்ப்பு
இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இந்தப் படத்திற்கான இசைக்கோர்ப்பில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகின. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

முதல்முறை கூட்டணி
தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். மணிரத்னம் படத்தில் நடிப்பது இவர்களில் பலருக்கும் முதல் முறை. நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் மணிரத்னத்துடன் முதல்முறையாகக் கை கோர்க்கிறார்கள்.

போலீஸ் கேரக்டர்
விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது சிறிய அளவிலேயே இருக்கும் என்று முன்னர் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது படம் முழுக்க விஜய் சேதுபதி வரும் அளவுக்கு கதையில் மாற்றம் செய்திருக்கிறாராம் மணிரத்னம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய கதாபாத்திரம்
'விக்ரம் வேதா' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதிக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், அவர் கதாபாத்திரத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார் மணிரத்னம். இதனால் கமர்ஷியல் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களும் கைவரப்பெறும் படமாக மணிரத்னம் படம் இருக்கும் என்று விஜய் சேதுபதி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











