சூரிக்கு அப்பாவாக நடிக்கும் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் செம போடு போட்டு வருகிறார் விஜய் சேதுபதி. அண்மையில் அவர் வில்லனாக நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வெற்றி மாறன் படத்தில்

வெற்றி மாறன் படத்தில்

எந்த கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பாக செய்து முடித்து விடுகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் வெற்றி மாறன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

சூரிதான் ஹீரோ

சூரிதான் ஹீரோ

அதாவது, இயக்குநர் வெற்றி மாறன், நகைச்சுவை நடிகரான சூரியை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.

விஜய் சேதுபதியின் ரோல்

விஜய் சேதுபதியின் ரோல்

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையல்ல

முதல் முறையல்ல

அதாவது, வெற்றிமாறன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சூரிக்கு அப்பாவாக நடிக்கிறார் என தெரிய வந்துள்ளது. விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடிப்பது ஒன்றும் இது முதல் முறையல்ல.

வெயிட்டான கேரக்டர்

வெயிட்டான கேரக்டர்

ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை அறிந்த ரசிகர்கள் நிச்சயம் அது வெயிட்டான கேரக்டராகதான் இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X