'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ?
சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோரை வைத்து எடுத்துள்ள படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார்.

படப்பிடிப்பில் த்ரிஷா காட்டும் அர்ப்பணிப்பை பார்த்து அவரை பாராட்டியுள்ளார் விஜய் சேதுபதி. இந்நிலையில் படத்தின் டீஸர் ஜூலை 12ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவித்தபடி டீஸரை வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதி மரத்தில் தொங்குவது போன்று டீஸர் துவங்குகிறது. டீஸரில் தாடியுடன், தாடியில்லாமல் என்று இரண்டு கெட்டப்புகளில் வருகிறார் மக்கள் செல்வன்.
த்ரிஷாவை காண்பித்ததும் காதலே காதலே என்ற பாடல் பின்புறத்தில் ஓடுகிறது. படம் மிகவும் அழுத்தமாக இருக்கும் என்பது டீஸரில் இருந்து தெரிகிறது.


Click it and Unblock the Notifications











