Just In
- 8 hrs ago
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 8 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 9 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
- 9 hrs ago
இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே
Don't Miss!
- News
புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. விமானம் மூலம் கொண்டு வந்து உதவிய தமிழிசை!
- Sports
ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு
- Automobiles
ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Lifestyle
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறித்தனம் தான் போங்க.. விஜய்சேதுபதியின் முதல் பாலிவுட் படம்.. மும்பைக்கார் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
மும்பை: நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள முதல் பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி, தர்பார் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சந்தோஷ் சிவன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
வாவ்...மகனுடன் கலர்ஃபுல் ஃபோட்டோஷூட்...அசத்திய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பிரபலம்
மும்பைக்கார் எனும் டைட்டிலில் விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாநகரம் ரீமேக்
மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அறிமுக படமான மாநகரம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஸ்ரீ, சந்திப் கிஷன், ரெஜினா கசாண்ட்ரா, முனிஷ்காந்த், சார்லி உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் மும்பைக்கார்.

பாலிவுட்டில் விஜய்சேதுபதி
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள மும்பைக்கார் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் விஜய்சேதுபதி. அமீர்கானின் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி வெளியேறிவிட்டார். மும்பைக்கார் படத்தைத் தொடர்ந்து கத்ரீனா கைஃப் உடனும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பைக்கார் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் விஜய்சேதுபதியின் முதல் பாலிவுட் படமான மும்பைக்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் லீடு ரோலில் பாலிவுட் இளம் நடிகர் விக்ராந்த் மசாய் நடித்துள்ளார். மேலும், தான்யா மணிக்டலா, சஞ்சய் மிஷ்ரா, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கூலர்ஸ் போட்டுகிட்டு
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தில் நடித்துள்ள அத்தனை முக்கிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். எத்தனை பேர் இருந்தாலும், தனக்கே உரிய தனி கெத்தோடு, கூலர்ஸ் போட்டுகிட்டு விஜய்சேதுபதி செம ஸ்டைலாக போஸ்டரில் தெரிகிறார். தமிழில் முனிஷ்காந்த் பண்ண ரோலில் இந்தியில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

விக்ராந்த் மசாய் பிறந்தநாள்
லூட்டேரா, ஹாஃப் கேர்ள் பிரெண்ட், சபாக் உள்ளிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகர் விக்ராந்த் மசாய், இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி விக்ராந்த் மசாய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.