பாலிவுட்டில் கத்ரினா கைஃபுடன் நடிக்கும் விஜய் சேதுபதி.. படத்தின் டைட்டில் இதுதான்!
சென்னை: பாலிவுட்டில் கத்ரினா கைஃப்புடன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது.
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. பல படங்களில் நடித்துள்ள இவர், ஹீரோ மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கேரக்டர் என பட்டையை கிளப்பி வருகிறார்.
அண்மையில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பாவானி என்ற கேரக்டரில் மிரள விட்டார். இதேபோல் தெலுங்கு படமான உப்பென்னா படத்திலும் வில்லன் ரோலில் நடித்து பாராட்டை பெற்றார்.

கத்ரினா கைஃப் ஹீரோயின்
இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாலிவுட் படத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்ததூன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் கத்ரினா கைஃப் ஹீரோயினாக நடிக்கிறார்.

படத்தின் டைட்டில் வெளியீடு
இந்நிலையில் இப்படத்தின் எக்ஸைட்டிங் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விஜய் சேதுபதி பாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கு மெரி கிறிஸ்துமஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

90 நிமிட படமாக
இந்த படம் த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இடைவேளை இல்லாமல் 90 நிமிட படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது காந்தி டாக்ஸ் மற்றும் மும்பைகர் என்ற இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

லாபம் ரெடி
தமிழில் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் நடிப்பில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படம் ரிலீஸ் ஆனது. இதனிடையே ஸ்ருதி ஹாசனுடன் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











