“சூர்யாவைப் பார்த்து ஏங்கிவிடக் கூடாது”.. மகளுக்காக நடிகர் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு!
சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதியின் மகளும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: மகன் சூர்யாவைத் தொடர்ந்து மகள் ஸ்ரீஜாவையும் தனது படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்த இருக்கிறார் விஜய் சேதுபதி.
தொடர்ந்து வித்தியாசமான படங்களாகக் கொடுத்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள போதே தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரையிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உள்ளார்.
சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் பன்முகத் திறமையாளராக விளங்கும் விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர்.

மகன் சூர்யா:
இவர்களில் சூர்யா, விஜய் சேதுபதி நாயகனாக நடித்த நானும் ரவுடிதான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் 21ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.

மகள் ஸ்ரீஜா:
இந்நிலையில், தனது மகள் ஸ்ரீஜாவையும் தனது படம் மூலமே நடிகையாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. சங்கத்தமிழன் படத்தில் ஸ்ரீஜா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திலும் விஜய் சேதுபதியின் மகளாகவே அவர் நடிக்க இருக்கிறாராம்.

இரட்டை வேடத்தில் விஜய் சேதுபதி:
சூர்யா நடிப்பதைப் பார்த்து மகள் ஏங்கி விடக் கூடாது என்பதால் அவரையும் இப்படத்தில் நடிக்க வைக்க விஜய் சேதுபதி முடிவு செய்ததாகத் தெரிகிறது. இப்படத்தில் இரண்டு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா நடிக்கின்றனர். விஜய் சந்தர் இப்படத்தை இயக்குகிறார்.

தொடர்ந்து நடிப்பார்களா?
சிந்துபாத் மற்றும் சங்கத்தமிழன் படங்களைத் தொடர்ந்து சூர்யாவும், ஸ்ரீஜாவும் தொடர்ந்து படங்களில் நடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி படங்களில் மட்டும் அவர்கள் நடிப்பார்களா அல்லது மற்ற நடிகர்களின் படங்களிலும் குழந்தை நட்சத்திரங்களாக நடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











