வெளியானது டிஎஸ்பி படத்தின் ட்ரெயிலர்.. மாஸ் காட்டும் விஜய் சேதுபதி!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது ஒவ்வொரு படங்களும் மற்ற படங்களுக்கு போட்டியாக அமைந்து வருகின்றன.

கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் சந்தனம் என்ற கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். இந்தப் படத்தின் கேரக்டர் இவருக்கு சிறப்பாக பொருந்தியது.

முன்னதாக மாமனிதன் என்ற படத்தில் சிறப்பான கேரக்டரை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் டிசம்பர் 2ம் தேதி இவரது டிஎஸ்பி படம் ரிலீசாக உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி நிற்கக் கூட நேரமில்லாமல் தொடர்ந்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

அடுத்தடுத்த படங்களில் பிசி

அடுத்தடுத்த படங்களில் பிசி

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் மிரட்டலாக அமைந்து வருகின்றன. கமல் லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விக்ரம் படத்தில் சந்தனம் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக அமைந்திருந்தது. கமலுக்கு டப் கொடுக்கும் கேரக்டரில் ரோலக்சின் கீழ் செயல்படும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். 3 மனைவிகளுடன் குதூகலமாக அவர் நடித்திருந்த கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.

ரசிகர்களை கவர்ந்த மாமனிதன்

ரசிகர்களை கவர்ந்த மாமனிதன்

இந்தப் படத்திற்கு முன்னதாக அவர் நடித்திருந்த மாமனிதன் படத்தில் மிகவும் சிறப்பான கேரக்டரை ஏற்று நடித்திருந்தார். இந்தப் படத்தில் காயத்ரியுடன் இணைந்து அவர் நடித்திருந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் விருதுகளையும் குவித்து வருகிறது. விஜய் சேதுபதி வில்லன் கேரக்டர்களில் நடிக்கக்கூடாது என்று படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியும் கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னணி நடிகர்களுக்கு வில்லன்

முன்னணி நடிகர்களுக்கு வில்லன்

ஆனால் வில்லன் கேரக்டர்களில் நடிப்பதன்மூலம் தன்னுடைய மாறுபட்ட நடிப்பு வெளிப்படுவதாக விஜய் சேதுபதி நினைப்பதாக தெரிகிறது. விஜய், ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக அதிரடி காட்டியுள்ளார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள டிஎஸ்பி படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு

ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு

இந்தப் படம் வரும் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனிடையே இன்றைய தினம் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெயிலரில் மிரட்டலாக காணப்படுகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படமும் அவரது ஹிட் வரிசையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X