»   »  மாஸ் விஜய் சேதுபதி... 'ஜுங்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

மாஸ் விஜய் சேதுபதி... 'ஜுங்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'ஜுங்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!- வீடியோ

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி படத்திற்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த அனைத்துப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இவர் தற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஜுங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வருகிறது.

Vijay sethupathi's junga first look

இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா சாஹல் நடிக்கிறார். காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் அனைவரையும் கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி கையில் ஒரு துப்பாக்கியுடன் கோட்சூட் அணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் மீசையில் தோற்றமளிக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு படங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. எப்போதும் கைகளில் படங்களுடன் பிஸியாகவே வலம் வருகிறார். இந்த ஆண்டிலும் அதிக படங்கள் நடிக்கும் முன்னணி நடிகராக விஜய் சேதுபதியே இருப்பார் எனக் கருதப்படுகிறது.

English summary
Vijay Sethupathi is acting in the movie 'Junga' directed by Gokul. The film's shooting is taking place in Paris. In this case, the first look poster of the film is officially released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X