'பொன்மகள் வந்தாள்' படத்தைத் தொடர்ந்து.. விஜய் சேதுபதியின் இந்தப் படமும் ஓடிடி-யில் வெளியாகுதாமே?
சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள பாம், க/பெ.ரணசிங்கம்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். இவர் இப்போது ஹீரோ உட்பட சில படங்களை தயாரித்துள்ளார்.

ஜிப்ரான் இசை
இந்தப் படத்தில் ரங்கராஜ் பாண்டே, சண்முகம் முத்துசாமி, அருண்ராஜா காமராஜ், பவானி ஶ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கெஸ்ட்ரோல்
கையில் விலங்குடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு கெஸ்ட்ரோல் தான் என்றாலும் முழு படத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் தனது நடிப்பால் தாங்க உள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
தென்மேற்கு பருவக்காற்று, ரம்மி, தர்மதுரை, செக்கச் சிவந்த வானம், பண்ணையாரும் பத்மினியும் என பல படங்களில் விஜய் சேதுபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளார். இந்த காம்பினேஷனுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால், இந்தப் படத்துக்கும் அந்த வரவேற்பு அதிகரித்துள்ளது.

தண்ணீர் பிரச்னை
அதற்கு உறுதி கூறுவதுபோல இந்தப் படத்தின் டீசர் அமைந்துள்ளது. தண்ணீர் பிரச்னையை பற்றி பேசும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வரவேற்பை பெற்றது. டீசரை பல சினிமா பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் ஜிப்ரான் படத்தை கடந்த சில நாட்களுக்கு முன் படத்தை பாராட்டி, ட்வீட் செய்திருந்தார்.

சிறப்பான நடிப்பு
அதில், பின்னணி இசைக்காக, க/பெ ரணசிங்கம் படத்தைப் பார்த்தேன். 'அறம்' படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இது இருக்கும். இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளனர் என கூறியிருந்தார்.

அமேசான் பிரைம்
இந்நிலையில் இந்தப் படம், ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ், அமேசான் பிரைம் நிறுவனத்திடம் பேசி வருவதாகவும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











