தியேட்டரில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரிலீஸ் குறித்த தகவல் உட்பட் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்கள் மற்றும் அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் விஜயகாந்த் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே.
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படம் தியேட்டரில் ரிலீஸ் தியேட்டரில் ரிலீஸ் ஆவது குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளது. இதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் மற்றும் லாபம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் செய்யப்படும் தகவலையும் கூறியுள்ளார் பிகே.

இதில் துக்ளக் தர்பார் திரைப்படம் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் லாபம் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் பிகே. லாபம் திரைப்படம் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் மணிசர்மா இணைந்துள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் இந்தியன் 2 பிரச்சனை தொடர்பாக இயக்குநர் ஷங்கர் லைக்கா நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானமானது குறித்த தகவலையும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











