அதிதி பாலனுடன் காதலா? கள்ள உறவா? பரபரப்பை கிளப்பும் விஜய்சேதுபதியின் ‘குட்டி ஸ்டோரி’ ஸ்நீக் பீக்!
சென்னை: 4 வித்தியாசமான காதல் கதைகளாக குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படம் உருவாகி இருக்கிறது.
இதில், நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி அதிதி பாலன் நடித்துள்ள கதையின் சின்ன ஸ்நீக் பீக்கை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சியை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது அந்த காட்சி.

குட்டி ஸ்டோரி
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடல் வரியையே இந்த காதல் ஆந்தாலஜிக்கு வைத்துள்ளனர். குட்டி குட்டி கதைகள் என்பதால் குட்டி ஸ்டோரி டைட்டில் கச்சிதமாக பொருந்துகிறது. தமிழ் சினிமாவில் பாடல் வரிகளை படமாக்கும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

4 இயக்குநர்கள்
ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த காதல் ஆந்தாலஜியை வெங்கட் பிரபு, கெளதம் மேனன், நலன் குமாரசாமி மற்றும் ஏ.எல். விஜய் உள்ளிட்ட 4 முன்னணி இயக்குநர்கள் இயக்கி உள்ளனர். ஒவ்வொரு கதையும் வித்தியாசமான காதலை சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

டிரெண்டான டிரைலர்
சமீபத்தில் குட்டி ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகி வேற லெவலில் டிரெண்டானது. விஜய்சேதுபதி, அமலா பால், அதிதி பாலன், கெளதம் மேனன், மேகா ஆகாஷ், அமிதாஷ், சாக்ஷி அகர்வால், வினோத் கிஷன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் டிரைலர் அட்டகாசமாக இருந்தது.
விஜய்சேதுபதி ஸ்நீக் பீக்
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஸ்நீக் பீக் யூடியூப் டிரெண்டிங்கில் மாஸ்டர் டெலிடட் சீனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. விஜய்சேதுபதியும் அதிதி பாலனும் நடித்துள்ள 2 நிமிடம் 31 நொடிகள் ஸ்நீக் பீக் வைரலாகி வருகிறது.

காதலா? கள்ளக் காதலா
4 வித்தியாசமான காதல் கதைகளுடன் உருவாகி உள்ள குட்டி ஸ்டோரியின் டிரைலரை பார்த்த போதே ஏகப்பட்ட நெட்டிசன்கள் இந்த லவ் ஸ்டோரியா? லஸ்ட் ஸ்டோரியா என கேட்டு வெளுத்து விட்டனர். இந்நிலையில், போன் கால் வந்ததும் மாடிக்கு போய் பேசுறேன் என விஜய்சேதுபதி ரகசியமாக அதிதி பாலனுக்கு கால் செய்வதை பார்த்ததும் இது காதல் கதையா? அல்லது கள்ளக் காதல் கதையா? எனக் கேட்டு வருகின்றனர்.

அருவி அதிதியா இது
மேலும், அருவி படத்தில் பார்த்த அப்பாவி அதிதி பாலனா இவர் என்கிற கேள்வியையும் அதிகப்படியான நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர். விஜய்சேதுபதியை அறைவது, உனக்கு உன் வைஃப புடிக்குமா? என்னை புடிக்குமா? என கேட்பது என ஹாட் அதிதியாக மாறிவிட்டார் என கமெண்ட்டுகள் பாய்கின்றன. வரும் பிப்ரவரி 12ம் தேதி திரையரங்குகளில் குட்டி ஸ்டோரி ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications











