'லாபம்' கடைசிக்கட்ட படப்பிடிப்பு... ரெடியாகிறார் 'புரட்சி விவசாயி' விஜய் சேதுபதி..சென்னை அருகே செட்!

By

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது என்று அதன் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சொன்னார்.

தமிழில், தேசிய விருது பெற்ற இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இப்போது இயக்கி வரும் படம், 'லாபம்'.

இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா, ஜெகபதிபாபு, கலையரசன், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

துப்பாக்கி போலீஸ்

துப்பாக்கி போலீஸ்

ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இதன், பர்ஸ்ட்லுக் போஸ்டர் சென்னையில் நடந்த விழா சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில், ஏர்கலப்பை, குழந்தையுடன் போராடும் பெண், ஆவேசமாக கோஷம் போடும் இளம் பெண், கையில் துப்பாக்கியுடன் குறிபார்க்கும் போலீஸ், இவர்களுக்கு நடுவில் ஒரு கையில் மைக்கும் ஒரு தோளில் ஒலிப்பெருக்கியுமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

மேலே 'குடிமக்களே...' என்று அவர் அழைப்பது போல ஓர் வாசகம் ஆகியவை அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விவசாயத்தையும் விவசாயிகளின் நிலை பற்றியும் பேசும் இந்தப் படத்தின் போஸ்டர் பற்றி இயக்குனர் எஸ்.பி ஜனநாதனிடம் கேட்டபோது, உலகம் முழுவதும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள் போராடியதைதான் காண்பிக்கிறது என்றார்.

காட்சி வடிவம்

காட்சி வடிவம்

மேலும் அவர் கூறும்போது, மக்கள் குண்டடிப்பட்டு செத்துதான் அந்த பலனை நாம் அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்த சிலைகள் உணர்த்துகின்றன' என்று கூறியிருந்தார். போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிலைகள் படத்திலும் அப்படியே இடம்பெறுகின்றன. அதை, வடிவமைத்தவர், பிரபல ஓவியர் சந்துரு. முக்கியமான ஓவியர். சினிமாவுக்காக அவர் வடிவமைத்த ஒரே காட்சி வடிவம் இது என்று படக்குழு தெரிவித்திருந்தது.

கடைசிக்கட்ட படப்பிடிப்பு

கடைசிக்கட்ட படப்பிடிப்பு

இந்நிலையில் இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம், சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதோடு படம் முடிகிறது. சென்னையில் சில இடங்களிலும் குன்றத்தூரில் செட் அமைத்தும் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X