விஜய் சேதுபதியின் லாபம்..ரிலீசுக்கு தயார்.. வெளியானது மாஸான அப்டேட்!
சென்னை : விஜய் சேதுபதியின் நடிப்பில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது.
Recommended Video
நீண்ட நாட்களாக தமிழ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் படங்களில் ஒன்றான லாபம், படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில் தற்போது டப்பிங் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாபம் படத்தை பற்றிய அப்டேட்களை பதிவிட்டதை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

மீண்டும் விஜய் சேதுபதியுடன்
தொடர்ந்து சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை இயக்குவதில் மிகப்பிரபலமான இயக்குனராக தமிழ் சினிமாவில் இருந்து வரும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யாவை வைத்து இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடமை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில் தற்பொழுது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தனித்துவமான இயக்குனர்
எஸ்.பி ஜனநாதன் இயக்கிய முதல் திரைப்படமே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று வெற்றி பெற்று தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்து வந்த நிலையில், தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்த எஸ்பி ஜனநாதன் ஜீவா நடிப்பில் ஈ மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் பேராண்மை உள்ளிட்ட மிகப்பிரபலமான வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்து தனித்துவமான இயக்குனராக தனக்கான ஒரு ரசிகர்களை கொண்டுள்ளார்.

மிக வேகமாக
இந்நிலையில் புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்திற்கு பிறகு தற்பொழுது இவர் இயக்கி வரும் லாபம் திரைப்படத்தின் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வரும் நிலையில், இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே முற்றிலும் எடுக்கப்பட்டு தற்போது டப்பிங் வேலைகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முக்கியமான அப்டேட்
கொரானா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் டப்பிங் வேலைகள் உள்ளிட்ட ஒரு சில வேலைகள் முடிக்க முடியாமல் தடைபட்டு வந்த நிலையில் இப்பொழுது டப்பிங் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பல பிரபலமான நடிகர் நடிகைகள் நடித்துவரும் இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் இப்பொழுது விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டப்பிங் முடித்த கையோடு
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்பொழுது வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறைவு பெற்ற நிலையில், நான் நடித்த காட்சிகளுக்கு தற்போது டப்பிங் முடித்த கையோடு ஸ்டூடியோவில் இருந்தவாறு, டப்பிங் பேசிய படி எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு லாபம் படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டது என சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

சொந்த தயாரிப்பு
இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட சமூக அக்கறை கொண்ட வெற்றிப்படங்களை தொடர்ந்து தற்போது இயக்கி வரும் லாபம் திரைப்படம் விரைவில் திரையில் வெளியாக தயாராக உள்ளது. மேலும் இந்த படத்தை விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











