விஜய்சேதுபதியின் "லாபம்" ஓடிடியில் ரிலீஸ்... ரசிகர்கள் கவலை!
சென்னை : தமிழ் சினிமாவில் இப்பொழுது செம பிஸியாக நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் விஜய்சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் அசுர வேகத்தில் நடித்து வருகிறார்.
சமூக பிரச்சனைகளை திரைப்படங்களின் வாயிலாக எடுத்துச் செல்வதில் திறமை வாய்ந்தவரானா இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடன் இணைந்து புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது லாபம் படத்தில் பணியாற்றி வருகிறார்.
லாபம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி சக்கைப்போடு போட்ட நிலையில் இப்பொழுது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ தகவலை விஜய் சேதுபதி வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

விமர்சன ரீதியாகவும்
தமிழ் சினிமாவில் இப்போது எக்கச்சக்கமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு படு பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் முதன்மையாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் மற்ற மொழிகளிலும் இவரது திரைப்படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

இயக்குனர் எஸ் பி ஜனநாதன்
கமர்சியல் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களிலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் விஜய்சேதுபதி இப்பொழுது இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடன் இணைந்து "லாபம்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கூடுதல் பாதுகாப்பு
சமூக அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வந்த லாபம் கடந்த சில மாதங்களாக தர்மபுரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு படப்பிடிப்பில் அதிக அளவு ரசிகர்கள் கூடுவதால் அப்படக்குழு நடிகர்களின் பாதுகாப்பு நலன் கருதி போலீஸ் பாதுகாப்பு கோரி இருந்தது.

புட்டு புட்டு வைத்த
இவ்வாறு பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த லாபம் திரைப்படம் ஒருவழியாக படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து இதன் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி சக்கைபோடு போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது. ட்ரெய்லர் காட்சிகளிலேயே சமூகத்தில் நடக்கும் அவலங்களை புட்டு புட்டு வைத்த வசனங்களுடன் பல்வேறு கெட்டப்புகளில் விஜய் சேதுபதி தோன்றியிருக்க இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

ஓடிடியில் ரிலீஸ்
இந்நிலையில் லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதியின் முந்தைய திரைப்படம் க.பெ. ரணசிங்கம் ஓடிடியில் வெளியானதை போலவே இப்பொழுது லாபம் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது, அதனை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது என கூறப்படும் நிலையில் இந்த அதிகாரப்பூர்வ தகவலை விஜய் சேதுபதி இப்பொழுது வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

கவலையில் ரசிகர்கள்
விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது, இந்த நிலையில் லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இந்த அதிரடி அறிவிப்பை கேட்டு கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











