பொருளாதார அரசியல் வகுப்பெடுக்கும் ஜனநாதன்.. வெளியானது விஜய்சேதுபதியின் லாபம் ட்ரைலர்!

சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள லாபம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

இயற்கை இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள எஸ்.பி. ஜனநாதன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பொதுவுடைமை

பொதுவுடைமை

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் படம் என்றாலே சமூகத்திற்கு தேவையான கருத்துக்களும், பொதுவுடைமை விஷயங்களும் நிறைந்திருக்கும். கமர்ஷியலுக்காக படம் எடுக்காமல், காமர்ஸை பற்றி படம் எடுக்கக் கூடிய தெளிவு வாய்ந்த இயக்குநர். அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள லாபம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

மக்கள் செல்வன்

மக்கள் செல்வன்

ஏற்கனவே ஜனநாதன் இயக்கத்தில் வெளியான புறம்போக்கும் எனும் பொதுவுடைமை படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார். ஆர்யா, ஷாம், கார்த்திகா நாயர் நடிப்பில் வெளியான அந்த படத்தில் தண்டனை கைதிகளை தூக்கில் இடும் தொழிலாளியாக நடித்திருப்பார். இந்த படத்தில், சமூக போராளியாக நடித்துள்ளார்.

விவசாயம் தான் முக்கியம்

விவசாயம் தான் முக்கியம்

தொழிற்சாலைகள் இயங்கினால் தான் நம்ம நாடு முன்னேறும் என பல முதலாளிகள் இந்திய மக்களை ஏமாற்றி வருவதாகவும், முதலாளிகள் மட்டுமே கோடிக்கணக்கில் எப்படி லாபம் ஈட்டுகின்றனர் என்பது குறித்தும், விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் இந்த படத்தில் பொருளாதார பாடம் நடத்தப் போகிறார் இயக்குநர் என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு

நீண்ட இடைவேளைக்கு பிறகு

சிங்கம் 3 படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள லாபம் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. படத்தின் ட்ரைலரில் அவர் மட்டும் தனியாக ராயல் லுக்கில் காணப்படுகிறார். பணக்கார வீட்டுப் பெண் சமூக போராளியான விஜய்சேதுபதிக்கு எப்படி உதவுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வில்லன் ஜெகபதி பாபு

வில்லன் ஜெகபதி பாபு

லிங்கா, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட தமிழ் படங்களில் வில்லனாக கலக்கி வரும் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு இந்த படத்திலும் பணக்கார வில்லனாக தொழிலதிபராக நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் லாபம் திரைக்கு வரும் என்ற அறிவிப்புடன் இந்த ட்ரைலர் முடிவடைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X