Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்பாடா...ஒரு வழியாக வெளியானது விஜய் சேதுபதியின் மாமனிதன் டிரைலர்...ரிலீஸ் எப்போ?
சென்னை : கிட்டதட்ட 3 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நான்காவதாக நடித்துள்ள படம் மாமனிதன். காயத்ரி, கே.பி.ஏ.சி.லலிதா, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம். காயத்ரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள ஐந்தாவது படம் இது.
விஜய் ரசிகர்கள் இருக்கும் வரை விஜய்யை ஒண்ணுமே பண்ண முடியாது...சொல்வது யார் ?
முதல் முறையாக யுவன்–இளையராஜா காம்பே
யுவன்சங்கர் ராஜா முதல் முறையாக தனது அப்பா இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ள படம் இதுவாகும். விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக, குடும்ப தலைவனாக நடித்துள்ள படம். தனது இரண்டு குழந்தைகளை படிக்க வைக்க அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின் கதை. மீண்டும் ஒரு சென்டிமென்ட் குடும்ப கதையை இயக்கி உள்ளார் சீனுராமசாமி.
3 வருடங்களாக காத்திருந்த படம்
2019 ம் ஆண்டு மார்ச் மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய படம் மாமனிதன். ஆனால் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெயசீலன் இதே பெயரில் தான் முன்பே பதிவு செய்திருந்ததாக கூறி வழக்கு தொடர்ந்தார். ஒரு வழியாக சட்ட போராட்டங்கள் முடிந்து, ஜெயசீலனிடம் இருந்து படத்தின் டைட்டில் உரிமத்தை யுவன்சங்கர் ராஜா வாங்கி, ப்ரொமோஷன் வேலைகளை துவக்கினார். ஆனால் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போய் கொண்டே இருந்தது.
ஒரு வழியாக டிரைலர் வந்தாச்சு
தொடர்ந்து தாமதமாவதால் இதை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஜீ 5 தளத்துடன் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. பிறகு அது பற்றி எந்த தகவலும் இல்லை. தற்போது யுவன்சங்கர் ராஜா தனது தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார். நீண்ட போராட்டம், தாமதத்திற்கு பிறகு மாமனிதன் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே பல ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.
பட ரிலீஸ் எப்போ
மாமனிதன் படம் மே 6 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மே 20 ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது. அதே சமயம் மாமனிதன் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக படத்தின் டிரைலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.