சந்தனமாக மிரட்டிய விஜய்சேதுபதி.. அடுத்து ஹீரோவாக அசத்தப்போகும் மாமனிதன் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு அடுத்து வெளியாக உள்ள படம் மாமனிதன்.

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் தான் மாமனிதன்.

முதல்முறையாக இந்த படத்திற்கு இளையாராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

நீண்ட நாள் காத்திருப்பு

நீண்ட நாள் காத்திருப்பு

தர்மதுரை படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் இன்னமும் வெளியாகவில்லை. தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக கிடப்பில் அந்த படம் கிடக்கிறது. அடுத்ததாக மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி இணைந்து நடித்த மாமனிதன் திரைப்படம் சில ஆண்டுகளாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, ஒருவழியாக தற்போது அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

ஹீரோவாக இரண்டாவது படம்

ஹீரோவாக இரண்டாவது படம்

இந்த ஆண்டு காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்தில் கேமியோ ரோலில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து ஹீரோவாக விஜய்சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் வெளியாகி உலகளவில் 66 கோடி வரை வசூல் ஈட்டியிருந்தது. இந்நிலையில், அந்த படத்திற்கு அடுத்ததாக மீண்டும் விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள மாமனிதன் இந்த மாதமே வெளியாக போகிறது.

வில்லனாக மிரட்டல்

வில்லனாக மிரட்டல்

இந்த மாதம் 3ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சந்தனம் எனும் கதாபாத்திரத்தில் தங்கப் பல் எல்லாம் வைத்துக் கொண்டு வில்லனாக மிரட்டி எடுத்திருந்தார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இரண்டு பெண்களை எப்படி காதலிக்கலாம் என எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், விக்ரம் படத்தில் ஷிவானி, மைனா நந்தினி மற்றும் விஜே மகேஷ்வரி என மூன்று ஹீரோயின்களுடன் நடித்து மாஸ் காட்டியிருந்தார்.

மாமனிதன் ரிலீஸ் தேதி

மாமனிதன் ரிலீஸ் தேதி

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகி உள்ள மாமனிதன் திரைப்படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆகப் போகிறது. இந்த மாதம் ஜூன் 24ம் தேதி படம் வெளியாகும் என விஜய்சேதுபதி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

Recommended Video

விஜய், கமல் சூட்டிங் ஸ்பாட்ல எப்படி நடந்துக்கொள்வார்? Lokesh Kanagaraj Pressmeet | Kamal | Vikram
இளையராஜா - யுவன் சங்கர் ராஜா

இளையராஜா - யுவன் சங்கர் ராஜா

முதன்முறையாக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இணைந்து மாமனிதன் படத்திற்கு இசையமைத்துள்ளனர். ஏற்கனவே படத்தின் சில பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள நிலையில், விரைவில் தந்தையும் மகனும் படத்தின் பின்னணி இசையில் எந்தளவுக்கு மேஜிக் செய்துள்ளனர் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X