மீண்டும் அதே பிரச்சனை… விஜய்சேதுபதியின் மாமனிதன் படத்திற்கு தொடரும் சோதனை!
சென்னை : விஜய்சேதுபதியின் மாமனிதன் படத்திற்கு தொடர்ந்து சிக்கல் மேல் சிக்கலாக வந்து கொண்டு இருக்கிறது.
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4வது முறையாக இணைந்த படம் மாமனிதன்.
இந்த படத்தில் காயத்ரி, குரு சோமசுந்தரம், சாஜி சென், ஜூவல் மேரி, அனிகா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர்.

மாமனிதன்
விஜய்சேதுபதியின் அசாத்தியமான நடிப்பில் 2019-ம் ஆண்டே மாமனிதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மாமனிதன் திரைப்படம் வெளியாகாமல் காத்திருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.

மே 6ந் தேதி ரிலீஸ்
மாமனிதன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து படம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாக உள்ளதால்,மாமனிதன் படம் மே 6ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மாமனிதன் கதை

மாமனிதன் கதை
இதையடுத்து, படத்தின் இசைவெளியிட்டு விழா கோலாகலமாக புதுவையில் நடைபெற்றது. இதில், மனிதன் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரில் ஆட்டோ ஓட்டுநராக வரும் விஜய் சேதுபதி இரு பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக தவறான வழியை தேர்ந்தெடுக்கிறார். இதனால் எதிரிகளிடமும், போலீசிடமும் மாட்டிக்கொள்கிறார். பின்னர் இவர்களிடமிருந்து தப்பிக்க தன குடும்பத்தை விட்டுவிட்டு கேரளா, காசி என ஊர் ஊராக சுற்றி திரிவது டிரைலரில் இடம் பெற்றது. இந்த டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றள்ளது.

மீண்டும் தள்ளிப்போனது
இந்நிலையில், மாமனிதன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமனிதன் திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். அதன்படி, மே 20-ம் தேதியில் இருந்து ஜூன் 24-ம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











