அட்ரா விசில....மரண மாஸ் குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி...வைரலாகும் வீடியோ
சென்னை : கோலிவுட்டின் பயங்கர பிஸியான நடிகராகி விட்டார் விஜய் சேதுபதி. விக்ரம், யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்து வாக்குல ரெண்டு காதல் என இவர் கைவசம் பெரிய பட்டியலே இருக்கிறது.
இதற்கிடையில் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சியை வேறு இவர் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஷுட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. சமீப நாட்களாக இது பற்றிய ஃபோட்டோக்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி
சினிமாவில் படு பிஸியாக இருக்கும் போதே டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி சின்னத்திரைக்கு வந்திருப்பது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மாஸ்டர் செஃப் செட்டில் அவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
மரண மாஸ் சாரே
சென்னை லோக்கல் மியூசிக்கிற்கு கரகாட்ட கலைஞர்கள் சிலருடன் சேர்ந்த மாஸாக குத்தாட்டம் போட்டுள்ளார் விஜய் சேதுபதி. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவர் போட்ட குத்தாட்ட வீடியோ, ஃபோட்டோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

கொண்டாடும் ரசிகர்கள்
ஏற்கனவே விஜய் சேதுபதியின் படங்கள், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி எப்போது வரும் என காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த வீடியோ செம கொண்டாட்டமாக உள்ளது. இவர் நடித்த லாபம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்காக வரிசையாக காத்திருக்கின்றன.

காத்து வாக்குல பிஸி
தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் இருப்பதால் இந்த வீடியோ வேற லெவல் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











