சர்வதேச நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி...வைரலாகும் மாஸ் ப்ரோமோ வீடியோ
சென்னை : இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார் விஜய் சேதுபதி. பல மொழிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதனால் பான் இந்தியன் நடிகர்களின் பட்டியலில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்திற்கு பிறகு பலரின் ஃபேவரெட் வில்லனாகவும் மாறி விட்டார் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், தெலுங்கில் தனது முதல் படமான உப்பன்னாவிலும் வில்லனாக நடித்தார். இவ்விரு படங்களுமே ரெக்கார்ட் பிரேக்கிங் பிளாக்பஸ்டர் படங்களாக ஹிட் ஆகின.
பல ஹீரோக்கள் டிவி ஷோக்களில் பங்கேற்க தயங்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க களம் இறங்கினார் கமல். இவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் புகழ்பெற்ற ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் சன் டிவி.,யில் நம்ம வீட்டு ஹீரோ என்ற நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது மீண்டும் சன் டிவி.,யில் மாஸ்டர் செஃப் தமிழ் என்ற நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது.
உலகின் பல மொழிகளிலும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி தற்போது தமிழில் சன் டிவி.,யில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, மிக ஸ்டைலாக ஹெலிகாப்டரில் வந்து மாஸ் என்ட்ரி கொடுப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி தற்போது தமிழில் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர், மாமனிதன், விடுதலை, காத்து வாக்குல ரெண்டு காதல், மலையாளத்தில் 19 (1) (ஏ), இந்தியில் மும்பைகர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











